வாழ்க்கை முறைவாழ்வியல்

வீட்டின் உபயோகமான ஆரோக்கிய டிப்ஸ்..!!

நம் வீட்டை பராமரிப்பது பற்றியும் சுத்தமாக வைப்பது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் நிறைய குறிப்புகள் உங்களுக்காக வழங்குகிறோம். கண்ணுக்கு தெரியாத கண்ணாடி துகள்களை துடைத்து எடுக்க நீரில் நனைத்த பஞ்சு அல்லது சப்பாத்தி மாவை உபயோகப்படுத்த வேண்டும். இதனால் கண்ணாடி துகள்கள் கைகளில் படாது.

பழைய ஷாம்புகளை

தரைகளை துடைப்பதற்கு பழைய ஷாம்புகளை உபயோகப் படுத்துங்கள். வீடு முழுவதும் அந்த வாசனை நிறைந்திருக்கும். வீட்டை துடைக்க 2 லிட்டர் தண்ணீரில், பச்சை கற்பூரம் கலந்து துடைத்தால் கோவிலில் இருப்பதை போன்ற உணர்வு இருக்கும். பழைய கிழிந்த பருத்தி ஆடைகளை அல்லது துப்பட்டாகளை கண்ணாடி பொருட்கள் தொலைக்காட்சிப் பெட்டி, முகம் பார்க்கும் கண்ணாடி மற்றும் மேசை நாற்காலிகளை துடைக்க உபயோகிக்க வேண்டும்.

கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பொருட்களில் உள்ள கறைகளை அகற்ற நகம் அகற்றும் லிகுய்ட்டில் பஞ்சில் நனைத்து துடைத்தால் பசை எளிதாக வரும். ஆனால் இதை பெயிண்ட் அடித்த இடத்தில் உபயோகிக்க கூடாது. ஏனெனில் பெயிண்ட் பிரிந்து விடும். புது தரை விரிப்புகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வாயு வெளியேறும் அது போல பழைய தரை விரிப்புகளில் தூசு மற்றும் சிறு பூச்சிகள் இருக்கும்.

குளிர்சாதனப் பெட்டி

இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்பதால் செராமிக் டைல்ஸ் உபயோகப்படுத்துவது நல்லது. 2 புகைப்படங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டால், ஹேர் ட்ரையரை அந்த படங்களின் மீது உபயோகப் படுத்தினால் அது விலகி விடும். ஒட்டிய தபால் கவர்களை மறுபடியும் பிரிக்க அதை சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

அப்படி செய்தால் தபால்களை சுலபமாக பிரித்தெடுக்க முடியும். மர சோபாக்கள் மற்றும் மரத்தினால் செய்த அழகுப் பொருட்களை பளபளப்பாக்க, சிறிதளவு தேங்காய் எண்ணெய், வினிகர், எலுமிச்சை சாறு, கலந்து பிரஸ் அல்லது துணியால் துடைக்க வேண்டும். மெழுகுவத்தி ஸ்டாண்டில் உள்ள மெழுகை அகற்ற, ஒரு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பின் சுத்தம் செய்வதால் மெழுகு எளிதாக அகற்றி விடும்.

தரையில் எண்ணெய் சிந்தி விட்டால், சிறிதளவு கோதுமை மாவு தூவி, துடைத்து எடுக்கலாம். அல்லது எண்ணெய் கறை படியாமல் பார்த்துக் கொள்ளலாம். அதிகமாக இருந்தால் அல்லது நாளிதழை கொண்டு, எண்ணெயை துடைத்து எடுத்து விட்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் மேட்களை வெயிலில் வாரம் ஒருமுறை காய வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் கொசுக்கள், முட்டை இடுவதை தவிர்க்கலாம் மற்றும் டெங்கு, மலேரியா போன்ற வைகளையும் தவிர்க்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *