நாளை விடுமுறை:- அரசு அதிரடி அறிவிப்பு..!
இந்தியத் திரையிசை உலகில் இன்னிசைக் குரலுக்கு சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி, இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி மும்பை செல்ல உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
‘இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். 8 தசாப்தங்கள் நீடித்த ஒரு வாழ்க்கையுடன், அவர் பல்வேறு மொழிகளில் தனது மெலிதான குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் தொட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி, கறுப்பு பேண்ட் அணிந்து இன்று விளையாடும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. லதா மங்கேஷ்கர் கிரிக்கெட் பிரியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “இந்தியாவின் இசைக்குயில் என கொண்டாடப்பட்டு உயரிய விருதுகள் பலவற்றையும் வாரிக்குவித்து கலைத்துறையில் பல தசாப்தங்களாக ஆளுகைசெய்து, தேனிசைக்குரலால் மக்கள் மனங்களில் குடிகொண்ட அம்மையார் லதா மங்கேஷ்கருக்கு கண்ணீர் வணக்கம்” என, அஞ்சலி செலுத்தினார்.
பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மகாராஷ்டிரா அரசு நாளை (பிப்ரவரி 7) பொது விடுமுறை அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மேற்குவங்கத்திலும் நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார், முதல்வர் மம்தா பானர்ஜி.