கல்விவேலைவாய்ப்புகள்

இன்டெர்வியூ போறிங்களா இதை ஃபாலோ பண்ணுங்க

நேர்முகத் தேர்வு நடப்பதாக இருந்தால் இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க. நேர்முகத் தேர்வு நாளன்று உடலுக்கு ஒத்துக் கொள்ளக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கேள்வி கேட்கும் போது எந்த வார்த்தையை கையாள வேண்டும் என்பதில் கவனம் தேவை. இதற்கு முன்னால் ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து இருந்தால் அதைப் பற்றி குறை கூற வேண்டாம்.

அப்படி கூறினால் தான் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் தவிடுபொடியாகும். இதனால் வேலை கொடுக்கும் நிறுவனத்தினர் உங்கள் மேல் தவறான அபிப்ராயம் கொள்ளக் கூடும். அடுத்த நிறுவனத்தில் சேர்ந்து நிறுவனத்தை பற்றி குறை கூறுவார் என்று உங்களை நிராகரிக்கப்படும். பதில் தெரியா விட்டாலும் தெரியவில்லை என்று உற்சாகமாக சொல்லுங்கள்.

உங்கள் பலவீனம் இதில் வெளிப்பட்டு விடும். எக்காரணம் கொண்டும் நேர்முகத் தேர்வு நடத்துஓரிடம் விவாதம் செய்யக் கூடாது. அவர்களுக்கு கோபத்தை வரவழைக்கும். அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து நேர்மறையாக பேசி வாய்ப்பை அதிகப்படுத்துவதை புத்திசாலித்தனமான செயல். தகுதி அதிகம் இருந்து குறைந்த ஆர்வம் உள்ளவர்களை விட, தகுதி குறைவாக இருந்தாலும் ஆர்வம் அதிகம் உள்ளவர்களுக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும்.

கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வகை நேர்முகத் தேர்வுக்கும் பார்மல் உடைகள் பொருத்தமான ஒன்றாக இருக்கிறது. முடிந்தால் நேர்முகத் தேர்வுக்கு செல்ல இருக்கும் நிறுவனங்களின் ஆடை விதிமுறைகள் குறித்து அறிய முயற்சி செய்யலாம். உங்கள் உடலுக்கேற்ற நேரத்துக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணிந்து கொள்ளுங்கள். புத்தாடைகள் தான் அணிய வேண்டும் என்றில்லை. இருக்கும் ஆடைகளை சிறப்பாக அணிந்து செல்ல வேண்டும்.

அதிக வாசனையை ஏற்படுத்தும் வாசனை திரவியங்களை பயன்படுத்த வேண்டாம். வேலை கிடைக்குமா, கிடைக்காதா என்று பதட்டப்பட தேவையில்லை. இயல்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். நேர்முகத் தேர்வை நடத்துவோர் முக்கியமான மூன்று அம்சங்களை கவனிப்பார்கள். தோற்றம், பேச்சு, நடத்தை ஆகியவை இவைகளை சிறப்பாக மேம்படுத்திக் கொள்வது அவசியமாகும்.

நேருக்கு நேரான தேர்வில் தோற்றப் பொலிவு மிகவும் முக்கியம். அழகாக இருக்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை. முடிதிருத்தம், முகச்சவரம், செய்து நகங்களை வெட்டி, துடிப்பான தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கம் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் நேர்முகத் தேர்வில் வெற்றி அடைந்தார்களா என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இங்கு உள்ளது.

முதல் மதிப்பெண் பெற்றிருந்த நேர்முகத்தேர்வில் கோட்டை விடுவோர் ஏராளமாக உள்ளனர். அவர்களின் அணுகுமுறை நிறுவனத்தினரின் எதிர்பார்ப்புக்கு இல்லாமல் போகும் போது எத்தனை முறை முயன்றாலும், வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். நேர்முகத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே தேர்வில் வெற்றி பெற முடியும். இதையெல்லாம் செய்தால் வெற்றி நிச்சயமாக உங்களுக்கு தான் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *