மலைவாழ் மக்கள் கோரிக்கை.. நடவடிக்கை எடுக்குமா? அரசு
கடந்த சில நாட்களாக குமரி மாவட்டம் மலையோர பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தன. பகல் வேளையிலும் கன மழை பெய்து வந்தன. கனமழை காரணமாக கோதை ஆற்றில் அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இங்குள்ள மின் உற்பத்தி நிலையில் தண்ணீர் தேக்கி வைக்கக் கூடிய நீரானது அதிகரித்துள்ளன. தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கோதை ஆற்றில் மோதிரம் மலையில் உள்ள குற்றியார் வழியாக செல்கின்ற பாதையில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் தரைமட்டம் வழியாக செல்கிறது.

12 கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் தங்களுடைய சொந்த கிராமத்திற்கு மழை காரணமாக செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தரைமட்டத்திலிருந்து உயர்மட்டம் ஆக மாற்ற வேண்டி மக்கள் கோரிக்கையை தொடர்ந்து வைத்தும். இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது அரசு என மலைவாழ் மக்கள் கூறுகிறார்கள்.