டிஎன்பிஎஸ்சி

நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் பகுதி 2!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான நடப்பு நிகழ்வுகளின் ஹைலைட்ஸ் இணைத்து கொடுத்துள்ளோம். தேர்வுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பதிவை தேர்வர்கள் பயன்படுத்தி வெற்றி பெறலாம்.

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக  இந்தியா அரசு ஜப்பான் சர்வதேச  இடையே செய்துகொள்ளப்பட்டுள்ளது. 
இந்தியாவில் வளர்ச்சி – மேம்பாட்டுக்கான குறியீட்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளம், தமிழகம் ஆகிய 3 மாநிலங்கள் முன்னனி இடங்களைப் பிடித்துள்ளன.
இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான சர்வதேச தகவல் இணைவு மையத்தை டிசம்பர் 22, 2018 அன்று ஹரியானாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கி அமைத்தார். 
 சாமிடா என்னும் ஜப்பான் நாட்டின் கடற்படையின் போர்க்கப்பல் நல்லெண்ண பயணமாக 20-22 டிசம்பர் 2018 தினங்களில் கொச்சி துறைமுகத்திற்கு வந்துள்ளது. 

W. V. ராமன் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
பிரதான் மந்திரி டிஜிட்டல் சாக்ஷார்தா அபியான்  2016-2017 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டமானது மத்திய மின்னனு மற்றும்  தகவல் தொழில்நுட்ப  அமைச்சகத்தின் மூலம் கிராமப்புறங்களிலுள்ள மக்களுக்கு கணினி அறிவை வழங்குவதாகும். டிசம்பர் 2018 வரை இத்திட்டத்தின்  மூலம் மார்ச் 2019 க்குள் மொத்தம் 6 கோடி மக்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளது. 

அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஆசிய சிங்கங்கள் பாதுகாப்பு திட்டமானது  97.85 கோடி செலவில்  மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அமலாக்கம் செய்யப்படிம் இத்திட்டத்தின் மொத்த செலவினத்தை மத்திய மாநில அரசுகள் 60: 40 என்ற விகிதத்தில் ஏற்றுக் கொள்ளும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

மூலிகை காடு

பதஞ்சலி நிறுவனத்துடன் ஹரியானா மாநிலம் இணைந்து சண்டிகரில் மோர்னி மலைப் பகுதியில் உலக மூலிகை காடு திட்டத்தை தொடங்கியுள்ளது. 
 பள்ளி மாணவர்கள் 22 இந்திய மொழிகளை எளிதாக கற்க மத்திய அரசினால் பாஷா சங்கம் எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத் எனும் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா திருவிழா

ஹவுஸ்லா 2018 என்ற பெயரில் காப்பகத்தில் வாழும் குழந்தைகளுக்கான தேசிய அளவில் திருவிழா புதுடெல்லியில்  நவம்பர் 26 -29, 2018 தினங்களில் குழந்தைகள் பாதுகாப்பு என்னும் மையகருத்துடன் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் அமைச்சகத்தால் நடத்தப்பட்டது. 
சாங்காய் திருவிழா என்ற மணிப்பூர் மாநிலத்தில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கலாச்சார மற்றும் சுற்றுலா திருவிழா நவம்பர் 21-நவம்பர் 30  2018 தினங்களில் நடைபெற்றது. 

கோப் இந்தியா என்ற பெயரில் இந்தியா – அமெரிக்கா விமானப்படைகளின் கூட்டு ராணுவ ஒத்திகை டிசம்பர் 3-14, 2018 தேதிவரை மேற்கு வங்க மாநிலத்தில் கலைகுண்டா மற்றும் அர்ஜுன் சிங் விமானப்படைத் தளங்களில் நடைபெற்றது. 
 மூன்றாவது ஆசியான் – இந்தியா வணிக கூடுகை 2018  மலேசியாவின் கோலாம்பூர் நகரில் 27 நவம்பர்  2018 அன்று நடைபெற்றது. 

சுகாதர காப்பீட்டுத் திட்டம்

தமிழ்நாட்டில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெற தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள முதலமைச்சர் சுகாதர காப்பீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைந்து ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மத்திய அரசுடன் செய்து கொள்ளப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாட்சிக்கு தமிழக அரசின் மூலம் கடலூரில் ரூபாய் 215 கோடியில் நினைவு மணடபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

தேசிய விருதுகள்

உள்ளாட்சித் துறையில் சிறந்த சிறந்த செயல்பாடுகளுக்காக தமிழகத்துக்கு தேசிய விருதுகள் தமிழ்நாட்டில் 2017-2018 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதித் திட்டத்தில் 58 லட்சம் பணியாளர்களுக்கான  23.98 கோடி மனித உழைப்பு நாள்களுக்கு 5,344 கோடி உதியம் வழங்கி செயல் போன்றவற்றிற்காக தேசிய அளவில் தமிழகம் முதலிட விருந்து வழங்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *