குரூப் 2 அறிவியல் பாட ஹைலைட்ஸ் படியுங்க!
குரூப் 2 தேர்வுக்கான பொது அறிவு கேள்விப் பதில்கள் பகுதியில் அறிவியல் பாடப்பகுதிகள் நன்றாக படிக்கவும். அறிவியல் பாடம் டிஎன்பிஎஸ்சி தேர்வில் முக்கிய பாடமாக இருக்கின்றது. தேர்வர்கள் அவற்றில் முக்கியமாக படிக்க
வேண்டும்.
அறிவியல் பாடப்பகுதியினை தேர்வர்கள் தங்கள் விருப்பம் போல் படிக்கலாம். தலைப்பு வாரியாக பிரித்து அதனை குறிப்புகளாக வகுத்துப் படிக்கவும் தேர்வை வெல்லவும்.
மருத்துவ அளவீடுகள்.
இரத்தத்தின் pH அளவு 7.35 – 7.45 என்ற அளவில் இருக்கும்.
சிறுநீரின் pH அளவு 4.5 – 8.0 என்ற அளவில் இருக்கும்.
இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.
நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.
நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும்.
டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.
சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.
சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயண்படுத்தப்பட்டகாற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவைசுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.
உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.
ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.
ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.
ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ
கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின்
விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.
நாம் சாப்பிடும் உணவில் புரோட்டின் வகை உணவின் விகித அளவு சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.
சிறுநீரின் அடர்த்தி எண் (Specific Gravity )சுமார் 1.020 முதல் 1.030வரை இருந்திடும்.
தினசரி வடிக்கப்படும் சிறுநீரின் அளவு (Daily Urine Out put)தினசரிசுமார் 1000 முதல் 1500 மில்லி வரை இருந்திடும்.
சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை(Body Temporature) சுமார் 36.8 Degree Centigrade என்ற அளவில் இருந்திடும்.
சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 98.4 Degree Foreinheitஎன்ற அளவில் இருந்திடும்.
ஹைப்போதைராய்டு (Hypothyroidism)நோய் நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 32O C DEGREES என்ற அளவில் இருந்திடும்.
ஹைப்போதைராய்டு நோய் (Hypothyroidism)நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 89.6O F DEGREES என்ற அளவில் இருந்திடும்.
உடல் வெப்பம் 25O C DEGREES கீழேஇறங்கினால் மரணம் நிகழும்.
உடல் வெப்பம் 77O F DEGREES கீழே இறங்கினால் மரணம் நிகழும்.
செரிபுரோஸ்பைனல் திரவம் (Cerebro Spinal Fluid)என்னும் மூளை நரம்பு திரவத்தின் அழுத்தம் சுமார் 50முதல் 180 mm Hg என்ற அளவில் இருந்திடும்.
கண்கோளத்தின் அழுத்தம் (Intra Occular Pressure)சுமார் 10-20 mm Hg -மெர்க்குறி -என்ற அளவில் இருந்திடும்.
ஆண்விதையில் (Testis)சுமார் 200 முதல் 300 வரை லோபுயுல்கள் (Lobules)என்னும் துணை அமைப்புகள் உள்ளன.
ஆண்களில்ஸ்பெர்மெட்டோசோவா (Spermatozoa)என்னும் விந்தணுக்கள் உடல் வெப்ப நிலையினைவிட 3O C DEGREES குறைவாக இருந்திடல் வேண்டும்.
ஆண் விதை(Testis) 4.5 C.M. நீளமும் 2.5 C.M. முதல் 3 C.M.தடிமனும் கொண்டதாகும்.
பெரும்பாலோரில் மாதவிலக்கு (Menstrual period)சுமார் 45 முதல் 55 வயதிற்குள் நின்று போகலாம்.
மாதவிலக்கு பெரும்பாலோரில் சுமார் 28 நாட்களில் ஏற்படுகிறது.
மாதவிலக்கின் மென்ஸ்ட்ருவல் நிலை (Menstrual Stage)4 நாட்கள்கொண்டதாகும்.
மாதவிலக்கின் இரண்டு நிலை களில் முதலாவது நிலையான புரோலிபரேட்டிவ் நிலை(Prolifertive Stage) சுமார் 10 நாட்கள் கொண்டதாகும்.
மாதவிலக்கின் இரண்டு நிலை களில் இரண்டாவது நிலையான செக்ரீட்டரி நிலை (Secretory Phase)சுமார் 14 நாட்கள் கொண்டதாகும்.
ஒரு பெண்னின் ஓவுலோவன்(Ovulation) எனப்படும் பெண் கருமுட்டை (Ovum)உற்பத்தி ஒவ்வொரு 40 நாட்களில் நடைபெறுகிறது.
காலும் வயிறும் இணையும் இடத்தில் உள்ள இங்குவனைல் கேனால் (Inguinal Canal)என்னும் வளையம் சுமார் 2.5 செ.மி. முதல் 4 செ.மி. வரை இருந்திடும்.
காலர்போன் (Collar Bone)என்னும் கழுத்து எலும்பு கருவின்எட்டாவது வாரத்தில் அமைகிறது.
எலும்புகளில் ஆசிபிகேஸன் (Ossification)என்னும் எலும்பு வளர்ச்சி 21 வயதிற்குள் முடிந்துபோகிறது.
சிறுநீரில் (Urine)சுமார் 96 சதவிகிதம் நீரும் 2 சதவிகிதம்யூரியாவும் (Urea)மீதம் 2 சதவிகிதம் மற்ற பொருள்களும் சேர்ந்திருக்கும்.
சிறுநீரின் அளவு தினசரி 500 மில்லிக்கு குறைந்திடாமல் இருந்திடல் வேண்டும்.
இரத்தத்தில் 160 மி.கி / மில்லி லிட்டர் என்ற அளவிற்குமேல்குளுக்கோஸ்(Glucose)இருந்திட்டால் இந்நிலையில்சிறுநீரில்குளுக்கோஸ் (Glycosuria)
வெளிப்படும்.
சிறுநீரகம் (Kidneys)ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்கள் (Nephrons)என்னும் நுண்வடிப்பான்கள் உள்ளன.
சிறுநீரகம் சுமார் 11 C.M நீளம் கொண்டதாகும்.
சிறுநீரகம் சுமார் 6 CM. அகலம் கொண்டதாகும்.
சிறுநீரகம் சுமார் 3 C.M. தடிமன் கொண்டதாகும்.