மொழிப்பாடத்தின் புணர்ச்சி விதிகளின் ஹைலைட்ஸ் பகுதி 8!
டிஎன்பிஎஸ்சியின் தேர்வில் மொழிப்பாடம் மிகவும் முக்கியமானது ஆகும். மொழிப்பாடத்தில் இலக்கணம் ஒரு முறை படித்தல் பல முறை பயிற்சி செய்து எழுதிப் பார்க்க வேண்டும். தேர்வில் எளிதல் நம்மை வெற்றி பெறுவதிலிருந்து தடுமாற வைக்க இந்த முறை கையாளப்படுகின்றது. ஆனால் மொழி அறிவு முறையாக பயிற்சி செய்தால் எந்த தேர்வையும் எளிதில் வெல்லலாம்.
மெய்யீற்றுப் புணர்ச்சி:
நிலைமொழியின் மெய்யீறும் வருமொழியின் உயிர்முதலும் உடல்மேல்உயிர்வந்து ஒன்றுவது இயல்பே என்னும் விதிப்படி புணரும்
எ.கா: பால் + ஆடை= பாலடைமலர்+ அடி= மலரடிகனல்+ஏரி= கனலேரிகடல்+ஓரம்= கடலோரம்
குறிலை அடுத்து வரும் மெய்யீறுகள் வருமொழியின் உயிர் முதலுடன் புணரும் போது தன்னொற்றிரட்டல் என்னும் விதிப்படி புணரும்.
கண்= கண்+ண்+அழகு= கண்ணழகி கல்+ அணை= கல்+ல்+அணை= கல்லணைகண்+ ஆடி= கண்+ண்+ஆடி= கண்ணாடிபல்+அழகு= பல்+ல்+அழகு= பல்லழகுவிண்+ஆரசு= விண்+ண்+அரசு= விண்ணரசு
திசைப்பெயர் புணர்ச்சி:
நான்கு திசைப்பெயர்களும்,பிற பெயர்களும் புணர்வது திசைப்பெயர் புணர்ச்சிவடக்கு+கிழக்கு =வடகிழக்குவடக்கு+ மேற்கு= வடமேற்கு
தெற்கு+ கிழக்கு= தென்கிழக்குதெற்கு+ மேற்கு= தென்மேற்கு
திசைப்பெயரோடு பிறப்பெயர்களின் புணர்ச்சி:வடக்கு+ மாலை= வடமாலைஇங்கு க், கு எழுத்துக்கள் நீங்கி புணர்ந்தது
தெற்கு+ திசை= தென்திசைநிலைமொழியின் ‘கு’ நீங்கி ‘ற்’ ஆனது ஆக மாறிப் புணர்ந்துள்ளது
கிழக்கு + நாடு= கிழ்நாடுநிலைமொழியின் இறுதியாக ‘க்கு’ நீங்கி ‘ழ’ என்னும் உயிர்மெய் அர்ம் நீங்கி கி என்னும் முதல் எழுத்து கீ என நீண்டு புணர்ந்தது
மேற்கு+ நாடு= மேல்நாடு, மேனாடு நிலைமொழியில் ‘கு’ நீங்கி ‘ற்’ ஆனது ‘ல்’ மாறி மேல்நாடு எனவும் ற் ஆனது ‘ந் ஆக மாறி மேனாடு எனவும் இருவகையில் புணர்ந்தது.
பண்புபெயர்ப் புணர்ச்சி:நிறம், சுவை, அளவு வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப்பெயர்களாகும்.
கருமை+விழிகரு+விழி கருவிழி
பெருமை+அன்பெரு+அன் ஈறுபோதல் பெரி+அன் இடை உகரம் இ ஆதல்பெரி+ய்+ஆன் உடன்படு மெய் பெறுதல் பெரியன் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
பசுமை+ இலைபசு+ இலை ஈறுபோதல்பாசு+ இலை ஆதிநீடல் பாச்+ இலை உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்
பாசிலை உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
பசுமை+கூழ் பசு+கூழ் ஈறுபோதல்பைசு+ கூழ் அடி அகரம் ஐ ஆதல் பை+கூழ் இணையவும்பைங்+கூழ் இனமிகல்
பைங்கூழ்
சிறுமை+ ஓடைசிறு+ஓடை ஈறுபோதல்சிற்று+ஓடை தனனொற்று இரட்டல்சிற்ற்+ஓடை உயிர்வரின் உக்குறல் மெய்விட்டோடும்.சிற்றோடை உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
செம்மை+ ஆல் செம்+ ஆம்பமல் ஈறுபோதல் சேம்+ ஆம்பல் ஆதிநீடல் சேத்+ ஆம்பல் முன்னின்ற மெய் திரிதல் சேதாம்பல் உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே
மகரஈற்றுப் புணர்ச்சி:மகர ஈற்றுச் சொற்கள் வருமொழியோடு புணரும் பொழுது இறுதி மகரம் கெட்டு உயிரீறு போல நின்று உயிர்முதல் மொழியோடு உடமடும்மெய் பெற்று புணரும்.
எ.கா: மரம்+ அடிமர+ அடிமர+வ்= மரவடி
நிலைமொழியின் மகரஈறுகெட்ட வருமொழி முதலில் உள்ள வல்லின எழுத்து மிக்குப் புணரும்
எ.கா:வட்டம்+ கல்= வட்டக்கல்
நிலை மொழியின் மகரஈறு வருமொழி முதலிலுள்ள வல்லினத்திற்கு இனமான மெல்லினமாகத் திரிந்து புணரும்.
எ.கா:நிலம் + கடந்தான்= நிலங்கடந்தான்
குற்றியலுகரப் புணர்ச்சி:
நிலைமொழியின் ஈற்றெழுது குற்றியலுகரமாக இருந்து வருமொழியின் முதலெழுத்து உயிராக இருந்தால் நிலைமொழியிலுள்ள குற்றியலுகரம் தான் ஊர்ந்து வந்த வல்லின மெய்யை விட்டு நீங்கும்
எ.கா:பந்து + ஆட்டம்பந்த்+உ+ ஆட்டம்பந்த் + ஆட்டம்பந்தாட்டம்
வருமொழியின் முதலெழுத்து ய கரமாயின் உகரம் இகரமாகத் திரியும்
எ.கா: குரங்கு+ யாது= குரங்கியாது
நிலைமொழியின் ஈற்றில் ‘ட’ கரம் ‘ற’ கரம் வரின் ஊர்ந்து வந்த ஒற்று இரட்டித்துப் புணரும்
எ.கா: ஆறு+ பாலம்= ஆற்றுப்பாலம்காடு+கோழி= காட்டுக்கோழி நாடு+ பற்று= நாட்டுப்பற்று வயிறு+ வலி= வயிற்றுவலி
மென்தொடர் குற்றுயிர்களும் சில வேற்றுமைப் புணர்ச்சியில் இனமான வல்லினத் தொடராய் முடியும்
எ.கா: மருந்து+ பை+ மருந்துப்பை இரும்பு + ஆணி= இரும்பாணி கரப்பு+வில்= கருப்புவில்