ஆன்மிகம்ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு

உலகமெங்கும் கொரோனா பரவல் காரணமாக ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே எளிமையாக வழிபடலாம். பொதுவாக வீட்டில் வைத்து வழிபடும் களிமண் பிள்ளையார், மஞ்சள் பிள்ளையார் வைத்து வழிபடும் போது, இவற்றை ஓடும் நீரில் கரைக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் இது சாத்தியமில்லை என்பதால் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். விநாயகர் சதுர்த்தி முதல் நாள் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். அன்றைய தினம் அதிகாலை எழுந்து குளித்து விட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

விநாயகர் படத்திற்கும் அல்லது சிறிய மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்து வழிபடலாம். விநாயகருக்கு மஞ்சள் பொட்டு வைத்து அருகம்புல் மாலை, எருக்கம் பூ மாலை சாற்றி விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், பொரி, எள் உருண்டை நிவேதனமாகப் படைத்து தூப தீபம் காட்டி வழிபடலாம். அன்று அதிகாலை ஒரு நேரம் விரதம் இருந்து மாலை கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது மூன்று நாட்களுக்கு மேல் நடைபெறும் இவ்விழாவில் இறுதியாக விநாயகரின் சிலையை நீரில் கரைத்து முடிப்பது வழக்கம்.

கடவுள் எல்லாம் முதற் கடவுளாக விளங்குபவர் விநாயகர். யானை முகம் மறைத்த விநாயகரின் பிறப்பு பல்வேறு புராணங்களில் பல விதமாக கூறப்படுகின்றன. அனைத்துக் கோவில்களிலும் ஆசனம் மூர்த்தியாக அமர்ந்து முதலில் தன்னை வணங்கி செல்லும் பக்தர்களுக்கு நலன் சேர்க்கும் கணபதியை அனைத்து சுபகாரியங்களுக்கும் முன் வைத்து வணங்குகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி விரதம் விநாயகருக்கு விரதமிருந்து வழிபட வாழ்வில் அனைத்து முன்னேற்றங்களும் வந்து சேரும். விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு துன்பங்கள் விலக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *