டிஎன்பிஎஸ்சி

குரூப் 2 தேர்வுக்கான அறிவியல் பாட ஹைலைட்ஸ் பகுதி 5!

டிஎன்பிஎஸ்சி  போட்டி தேர்வுகளில் முக்கியமான ஒன்றான குரூப் 2 தேர்வினை  வெல்ல அறிவியல் பாடப்பகுதி முக்கியமான ஒன்றாகவுள்ளது. தேர்வர்கள் இந்த பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டியது அவசியம் ஆகும். அறிவியல் பாடங்களை படியுங்க தேர்வினை வெல்லுங்க. கடந்த அறிவியல் தொகுப்பின்   தொடர்ச்சி இங்கு கொடுத்துள்ளோம்.

பாஸ்பேட் அயனியாக  உறிஞ்ச பாஸ்பரஸ் பயன்படுகின்றது.செல் சவ்வு மற்றும் உட்கரு அமில உருவாக்கத்துக்கு அவசியம் ஆகும்.சத்து குறைப்பாட்டினால் விதை முளைத்தல்  தாமதமாகிறது. இலைகளும் மொட்டுகளும் முதிர்ச்சி பெறாமல் உதிர்ந்துவிடுகின்றன.பொட்டாசியம்  செல்களின் அமில காரச் செறிவை சமநிலைப் படுத்தவும் இலைத் துளைகளை மூடவும் திறக்கவும் இந்த சத்து அவசியம் ஆகின்றது.

மக்னீசியம்-பச்சையம் நிறமி உருவாக்கத்துக்கு  அடிப்படை தேவையாகும் போரான் -போரேட் அயனிகளாக உறிஞ்சப்படுகின்றது.கருவுறுதல் செயலுக்கும், செல் நீட்சிக்கும் செல் வேறுபாடுகளுக்கும் கார்போஹைட்ரேட் அயனிகளாக உறிஞ்சப் படுகிறது.கருவுறுதல் செயலுக்கும் செல் நீட்சிக்கும் செல் வேறுபாடுகளுக்கும் கார்போஹைட்ரேட் இடமாற்றத்துக்கும் இந்தச் சத்து அவசியமாகும்.

புற்றுநோய்

புற்றுநோய் -அபரிதமான, ஒழுங்கற்ற செல் வளர்ச்சியே புற்றுநோய் எனப்படும். பல் அமைவு – நமது உடலின் மிகக் கடினமான பகுதி எனாமல் பற்கூழ்  உள்ள  பற்கூழ் குழியைச்  சுற்றி ஒடண்ட்டோபிளாஸ்ட் என்ற சிறப்பு செல்கள் உற்பத்தி செய்யும் பொருள் டெண்டைன். பால்  பற்களின் எண்ணிக்கை 20 இவை நிலையற்ற பற்கள் ஆகும்.நிலைத்த பற்கள் எணிக்கை 32 ஆகும். வெட்டும் பற்கள் உணவு பொருட்களை கடித்து  வெட்டுவதற்கு பயன்படுகின்றது. கோரைப் பற்கள்-உணவு பொருட்களை குத்தி கிழிக்கப் பயன்படுகின்றது.முன்பின் கடைவாய்  பொருட்கள்  உணவு பொருளை நன்றாக அரைப்பதற்கு பயன்படுகின்றது.பயோரியா -ஈறுகளையும், பற்களைச்  சுற்றியுள்ள எலும்புகளையும் தாக்கும் நாட்பட்ட பற்சிதைவு நோய்  ஹாலிடோஸிஸ்-வாய்குழியில் ஏற்படும்.

தொற்று பற்சிதைவு, இதனால் உண்டாகும் வாய்துர்நாற்றம்.புட்டாளம்மை வைரஸினால் ஏற்படும் நோய் நரம்பு மண்டலம்.உமிழ்நீர்  சுரப்பிகளைத் தாக்கி வீங்கச் செய்யும். சூனோசஸ்- மனிதனுக்கும் முதுகெலும்புடைய விலங்குகளுக்கும் இடையே இயற்கையாவே பரவுகின்ற தொற்று நோய் ஆகும்.

முக்கிய சூனோசஸ்  நோய்கள்: 

பாக்டீரியா  சூனோசஸ் – ப்ளேக் வைரஸ்  சூனோசஸ்- ரேபிஸ், ஜப்பானிய மூளைக் காய்ச்சல்ஒரு செல் உயிரி சூனோசஸ் – மலேரியா, ட்ரிபனோ ரேமியாசிஸ்
புழுக்களினால் சூனோசஸ் – டீனியாசிஸ் ஆஸ்காரிஸ், பைலேரியாசிஸ்
பூஞ்சை  சூனோசஸ் – மைக் காட்டி நோய்
புற ஒட்டுண்ணி சூனோசஸ்- நாயுண்ணிகளால் தெள்ளுப் பூச்சிகளால் ஏற்படும்  தொற்றுதல் ஆகும்.

புற்று நோயின் ஐந்து வகைகள் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
கார்சினோமா வகை-  உடலின் புற மற்றும் அகப் பகுதி புற்று நோய்கள் நுரையீரல், மார்பு, மலக்குடல் பகுதிகளில் காணப்படுபவை.

சார்கோமா வகை – எலும்பு, குருத்தெலும்பு, கொழுப்பு பகுதி, புற்று நோய்கள் இணைப்பு திசுக்கள்,  தசை மற்றும் தாங்கு திசுக்களில் காணப்படுபவை

லிம்போ வகை- எலும்பு மஞ்ஜையிலும், ரத்த ஓட்டத்திலும் காணப்படுபவை

அடினோ வகை- நாளமில்லாச் சுரப்பிகளான தைராய்டு , பீட்யூட்டரி, அட்ரினல் மற்றும்  பிற சுரப்பிகளில் காணப்படுபவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *