குரூப் 2 இந்திய பொருளாதார ஹைலைட்ஸ் படியுங்க!
இந்தியப் பொருளாதார பண்புகள்:
முக்கியமாக இப்பொழும் 66% மக்கள் வாழ்வதற்கு உழவுத் தொழிலை நம்பியுள்ளார். நாட்டின் மொத்த வருவாயில் 14% மட்டுமே உழவுத் தொழிலின் மூலம் கிடைக்கின்றது. நமது நாட்டை கிராம இந்தியா என்று கூறுவது மிகவும் பொருத்தமாகும்.
இந்தியா இன்றும் வேளாண்மை நாடாக இருப்பதால் ஆறில் ஐந்து பகுதி மக்கள் வேளாண்மையைச் சார்ந்துள்ளார்.
குறைவான தொழில் வளர்ச்சி:
விரைவாக தொழில்கள் வளரவில்லை. தொழில் வளர்ச்சியில் பல சிக்கல்கள் குறுக்கிடுன்றன. தொழில் நுணுக்கத்தில் பின்தங்கியுள்ளோம். மேலை தொழில் நுணுக்க மேம்பாட்டினால் ஆக்கத்திறன் உயர்ந்துள்ளது.
நம்நாட்டில் சிறுதொழில்கள் உற்பத்தி முறைகளும், கருவிகளும் மிகவும் தொன்மையானவையாக இருக்கின்றன, சிறு தொழில்களில் ஈடுப்பட்டுள்ளவர்களின் வருவாயும் வாழ்க்கைத் தரமும் மிகுந்த தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும், மூலதனம் குறைவாக இருப்பதால் பெரிய தொழில் தொடங்க விரைந்து செயல்படாமல் தேக்க நிலைக்கு செல்கின்றது.
குறைந்த வருவாய்: நமது நாட்டு மக்களின் பெரும்பாலோனோர் போதுமான வருவாயின்றி வறுமைக் கோட்டிற்குள் வாடுகின்றனர். உலக மக்கள் தொகையில் 17.5 % நமது நாட்டில் வாழ்கின்றனர். உலக பரப்பளவில் இந்தியா 24 சதவிகிதம்தான்- இதிலிருந்து நமது நாட்டின் வளர்ச்சி குறைந்தை நிலைமை தெளிவாக அறியலாம்.
மக்கள் பெருக்கம்: இந்தியாவில் மக்கள் தொகை விரைந்து வளர்கின்றது. இறப்பு விகிதத்தை விடப் பிறப்பு விகிதம் மிகுதியாக உள்ளது. மக்கள் தொகை கடந்த பத்து ஆண்டில் 17.64% உயர்ந்துள்ளது. வளர்ந்து வருகின்ற மக்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நாம் வழங்க வேண்டியது அவசியமாகும்.
மூலதனப் பற்றாக்குறை:
நமது நாட்டில் போதுமான அளவில் மூலதனம் பெருக்கப்பட வேண்டும். இங்கு வறுமையின் நச்சு வட்டத்திற்குள் மக்கள் சுழல்வதை மாற்ற வேண்டும். வருவாய் குறைவாக இருக்கின்றது, சேமிக்கும் ஆற்றல் பெருக வேண்டும். இதனால் மூலதன வளர்ச்சி அளவு மூலதன லாப வளர்ச்சி அளவு தாழ்ந்த நிலையில் இருக்கின்றது.
வேளாண்மை சிக்கல்: பின்தங்கிய வளர்ச்சி பெறாத பொருளாதாரத்தில் காணப்படுகின்ற வேலையில்லாத திண்டாட்டம் நமது நாட்டில் வளர்ந்து வரும் சிக்கலாக காணப்படுகின்றது. முழு நேரம் வேலையில்லாமல் இருப்பவர்களும் எண்ணிக்கையில் மிகுந்து வருகின்றனர். திட்டங்களில் மூலம் ஏற்படுகின்ற வேலை வாய்ப்புக்களை விட வேலை செய்யும் வயதை அடையும் மக்களின் எண்ணிக்கை மிகுந்து வருவதால் வேலையின்மைச் சிக்கல் தீர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது.
தொன்மையான சமுதாய அமைப்பு முறை: சாதி முறை போன்ற பழமையான இயல்புகளைக் கொண்ட சமுதாய அமைப்பு முறை விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றதாக மாற்றப்பட வேண்டும்.
வாணிப நிலை: இந்தியாவின் வெளிநாட்டு வாணிபநிலை இன்றும் பாதகமானதாகவே இருக்கின்றது. மூலப் பொருட்கள் ஏற்றுமதியைக் குறைத்து நுகர்பொருட்களை ஏற்றுமதி செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும். வெளிநாடுகளிலிருந்து எந்திரங்களையும் உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்வதை குறைக்க முடியவில்லை. பாதச்செலுத்து நிலையை சீர்ப்படுத்த முடியாத நிலை தொடர்கின்றது. இது நாட்டின் சமநிலைப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கின்றது.
மிகுதியான ஏற்றத்தாழ்வு: மக்கள் செல்வப் பகிர்விலும் வருவாயிலும் மிகுதியான ஏற்றத்தாழ்வில் இருக்கின்றது. கீழ்மட்டத்தில் 20% பெற்றிருக்கின்றன. ஆனால் மேல் மட்டத்தில் 4% சதவிகித குடும்பங்களுக்கு மொத்தச் சொத்தில் 31% சொந்தமாக உள்ளது. வருவாயிலும் இதே நிலைதான் விரைவான வளர்ச்சியின் முட்டுக்கட்டையாக இருகின்றது.
மனிதவள குறைவு: நமது மக்கள் அறிவாற்றலில் மக்களை மேம்படுத்த வேண்டும். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு கற்றவர்கள் 74% கல்லாதவர்கள் 26 சதவிகிதம். வளர்ச்சி பெற்ற நாடுகளில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான மக்கள் படிப்பறிவில் கல்லாதவர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
குறைந்த நிலை தொழில்நுட்ப வளர்ச்சி: நமது நாட்டில் ஒரு பக்கம் மிகுந்த தொழில்நுட்பம் இருந்தாலும் பக்கத்திலேயே பழைய தொழில் நுட்பமும் உள்ளது. தொழிற் வளர்ச்சியும் உற்பத்தியும் குறைவாக உள்ளது. அதனை மாற்ற வேண்டும்.
கட்டமைப்புகளின் பற்றாக்குறை: பொருளாதார வளர்ச்சிக்கு வேண்டிய போக்குவரத்து செய்திதொடர்பு வங்கிகள், கல்வி மருத்துவ வசதிகள் போன்ற அக்கட்டுமானங்கள் குறைவாக உள்ளன.
பயன்படுத்தா இயற்கை வளங்கள்:
இருக்கின்ற மனித சக்தியை முழுமையாக பயன்படுத்த முடியமாலிருப்பதை போலவே நாட்டிலுள்ள இயற்க்கை வளங்களையும் இந்தியா சரிவரப் பயன்படுத்தாமல் இருக்கின்றது. நம்மிடமுள்ள காட்டுவளம் கனிம வளம், நீர் வளம் போன்றவற்றைப் பற்றிய சரியான புள்ளி விவரங்கள் சேகரிக்க வேண்டியது அவசியமாகும்.
அமைப்பற்ற பொருளாதாரம்:
கட்டுக்கோப்பிற்குள் வந்திருப்பத்தைவிட அமைப்பற்ற துறைகளாக இருக்கின்ற பொருளாதாரப் பகுதிகளே நமது நாட்டிற்கு மிகுதியாகும். இதனால் திட்டப்படி அரசால் பல ஆக்கப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பொருளாதார வளர்ச்சிக்குரிய வங்கிகள் போன்ற நிறுவனங்களை இப்பொழுதுதான் வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். காலப்போக்கில் கட்டுக்கோப்பான பொருளாதாரம் அமைவதற்குரிய அறிகுறிகள் காணப்படுகின்றன.