செய்திகள்தேசியம்

உயர்நீதிமன்றம் இந்தியாவிற்கு முன் வைத்த கருத்து

தமிழகம் ஒரு அமைதியான மாநிலமாக உள்ளன. இதற்கான காரணங்கள் “மாநில மக்கள் இயல்பாகவே அமைதியானவர்கள், சட்டத்தை கடைபிடிப்பவர்கள், திறமையான காவல் இயந்திரம் உள்ளன. தொற்று நோய்களின் போது கூட சட்டம்-ஒழுங்கை திறம்பட கையாள முடிகிறது. திறமையான போலீசுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

காவல்துறை

காவல்துறை கூர்மையான நடைமுறைகளை நாடினால் குடிமக்களிடமிருந்து அந்நியபடுவார்கள். சட்டம், ஒழுங்கை காப்பாற்ற பெரும்பாலும் சிறைவாசம் அனுபவிப்பது எளிய மக்கள் தானே, தவிர வசதிபடைத்த குடும்ப தலைவர்கள் அல்ல; மேலும் பழ விற்பனையாளர் மற்றும் தெரு வியாபாரிகள் போன்றவர்களை கிரிமினல் வழக்குகளில் பறிமுதல் சாட்சிகளாக முன் வந்து நிற்க காவல்துறையினர் கட்டாயப் படுத்தப்படுகின்றனர்” என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளிடம் இருந்து நன்னடத்தை காண நடத்தையை பேணுவதற்கு மீறப்பட்டால், ‘சிறைக்கு அனுப்புவதற்கு அதிகாரம் வழங்கப்படாமல் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவது சாத்தியம் இல்லை’, என்று காவல்துறை சொல்வதை ஏற்க முடியாது என்று கூறிய, நீதிபதி பிரகாஷ் ‘சட்டத்தின் ஆட்சியை பலிபீடத்தில் பலியிட முடியாது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் நடைமுறை

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு நிறைவேற்று மாஜிஸ்திரேட்டின் செயல்பாடுகளை செய்ய மாநிலம் முழுவதும் உள்ள காவல்துறை துணை ஆணையர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவு சட்ட விரோதமானது என்று கூறப்பட்டு உள்ளன.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்

ஏனெனில் இவை நேரடியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது பிரிவை மீறுவதாக இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் அவர்கள் அமைதியை காப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு குறித்து 117ன் கீழ் சட்டத்தை மீறுபவர்களை சிறையிலடைக்க காவல்துறை அதிகாரிகளுக்கு மாநில அரசு வழங்கி அதிகாரங்களுடன் கருத்துவேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டார்,

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் ஒரு மாஜிஸ்திரேட்டின் அதிகாரத்தை காவல்துறை துணை ஆணையர்களுக்கு வழங்குவது சட்டவிரோதமாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளன. மேலும் உயர்நீதிமன்றம் இந்தியா ஒரு போதும் போலீஸ் அரசாக மாறக் கூடாது என்ற கருத்தை முன் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *