டெக்னாலஜி

வோல்ஸ் வோகனின் ஹைடெக் காண்செப்ட்களின் கூல் காட்சி!

வோல்ஸ்வேகன் நிறுவனம் 7 சீட் கொண்ட எஸ்யூவி கான்செப்ட்களை 2019 ஷாங்காய் ஆட்டோ ஷோவில் காட்சி படுத்துவதற்கு முன்பு வெளியிட்ட்  அசத்தியுள்ளது. 

எஸ்எம்வி கான்செப்ட்கள் பெரியளவில் ஏழு சீட் எஸ்யூவிகளாக சீனா மார்க்கெட்டில் பிரிவியூ செய்துள்ளது. வி டபிள்யூ குரூப் MQB பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எஸ்எம்வி கான்செப்ட்களுடன் 5.1m நீளம் மற்றும்   கெத்தான அளவில்  தயாரிப்பு நிலையிலான எஸ்யூவி-களாக வோல்ஸ்வேகன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 எஸ்எம்வி-களின் ஸ்டைல், டிசைன்கள் புதிய அளவிலான விடபிள்யூ எஸ்யூவி-களுடன் செவ்வக வடிவிலான ஹெட்லேம்கள் மற்றும் மேம்படுத்தப்பட எல்இடி டி ஆர்எல்களுடன் வெளியாகியுள்ளது. இதில் கிரில், ஷார்ஃப் லைன் மற்றும் கிரிஸ்கள், வளைவான பென்னட் மற்றும் ரூப்லைன்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

இக்காரில் கிரில்களுடன் எல்இடி லைட்களுடன் ரன்னிங் டிஆர்எல்கள் ஹெட்லேம்களும் உள்ளன. பின்புறத்தில் இதேபோன்ற ஸ்டைல்களுடன் எல்இடி டைல்-லேம்கள் மற்றும் அகலமான எஸ்யூவி-யாக உள்ளது.

மேலும் இக்காரின் கான்செப்ட் கூடுதலாக, ஆர்ப்பாட்டமான ஸ்டைல்களுடன் கூடிய பம்பர்கள், பெரியளவிலான அலை வீல்களுடன் லுமினேட்டட் உபகரணங்களுடன் முன்புற பென்டர்கள் மற்றும் டோர் ஹேண்டில்களும் உள்ளன.

தயாரிப்பு நிலையிலான இந்த எஸ்யூவி-க்கள் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர் டர்போ பெட்ரோல் மற்றும் பெரியளவிலான சீனா-ஸ்பெக் 2.5 லிட்டர் 6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் மோட்டார்களுடன் 299ஹெஸ்பி மற்றும் 499என்எம் டார்க்கில் இயக்கும்.

வியூ எஸ்எம்வி கான்செப்ட்கள் சீனாவில் தயாரிக்க தொடங்கப்பட்டு விட்டது. அங்கு FAW வோல்ஸ்வேகன் நிறுவனத்துடன் இணைந்தே தயாரிப்பு நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *