மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்காக விழிப்புணர்வு மையங்கள் அமைக்க கோரிக்கை
ஒருகாலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இருந்து உள்ளனர். தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை. மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிக்காரர்கள் இது சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி மையங்களை அமைத்து கொடுக்கலாம்.
- வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் துவக்க முகாம்கள்
- மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த
- சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தி பயிற்சி மையங்களை அமைத்து கொடுக்க
துவக்க முகாம்கள் மற்றும் இணைய வழி
பல துறைகள் சார்ந்த வேலை வாய்ப்புகள் பயிற்சிகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வெவ்வேறு துறைகள் சார்ந்த தேர்வுகள், உயர்கல்வி விபரங்கள், கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் துவக்க முகாம்கள் மற்றும் இணைய வழியிலான ஒருங்கிணைப்புகளை மேற்கொண்டு உத்தரவிட வேண்டும்.
தேவையான அமைப்புகள்
மருத்துவம் மற்றும் பொறியியல் தவிர்த்து, மேலாண்மை சட்டம், கல்வி இயல், கணக்குத் தணிக்கை, விவசாயம், கவின்கலை என பல்வேறு துறைகள் இருக்கின்றன. தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மருத்துவம், பொறியியல் துறைகள் சார்ந்த விவரங்களை மாணவர்களிடமிருந்து சேர்க்க தேவையான அமைப்புகள் இருப்பதில்லை.
தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு
தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர்கல்வி தொடர்பான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து பயிற்சி அளிப்பதற்கு மையங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். தற்போது பள்ளியிலேயே மாணவர்கள் மதுவிற்கு அடிமையாகும் சூழல் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வழிகாட்டுதல்களை வழங்க
தமிழகத்தில் நீட், ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உள்ளது. பிற உயர் படிப்புகளை தேர்வு செய்ய விரும்பும் மாணவர்களுக்கு இதுதொடர்பான வழிகாட்டுதல்களை வழங்க போதுமான வாய்ப்புகள் இருப்பதில்லை. மேலும் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் யோசனை தெரிவித்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.