இனி குழந்தைகளுக்கு ஹெல்மட் கட்டாயம்..!
இனி இந்த வயதுக்குட்பட்ட குழந்தைகளும் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதனையடுத்து சாலை பாதுகாப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக தமிழ்நாடு அரசு முதல் 48 மணி நேர இலவச சிகிச்சை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைந்தவர்கள் முதல் 48 மணி நேரத்தில் எந்த மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023பிப்ரவரி 15 முதல் அமலுக்கு வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கும் இரு சக்கர வாகனத்தை மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்துக்கும் மேல் இயக்கக் கூடாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு கருதியும், விபத்துகளை குறைக்கும் நோக்கில் வழிகாடு நெறிமுறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.