ஹல்லோ லேடீஸ்.. நீங்க இத ட்ரை பண்ணீங்களா..!!
வெங்காய வடகம் புளி குழம்பு வைக்கும்போது வெங்காயம் கட் பண்ணி செய்யனும். ஸ்கூலுக்கு அனுப்பும் போது அவசர அவசரமா வெங்காயத்தை கட் பண்ணி, எல்லாத்தையும் செஞ்சுட்டு இருக்கணும். அதுக்கு இப்ப வெயில் காலத்தில் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது, இந்த வடகத்தை தயாரிச்சு வைங்க. ஸ்கூல் டைம்ல ஈசியா இருக்கும்.
காலையில எழுந்திரித்த உடனே உட்கார்ந்து கட் பண்ணிட்டு இருக்க வேண்டிய வேலை இருக்காது. வாங்க வெங்காய வடகம் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இப்ப வெங்காயத்தின் விலை குறைவாதான் இருக்கும். மழைக் காலங்கள் வெங்காய விலை ஏகிறிவிடும். அதனால இந்த டைம்ல வெயில் காலங்கள்ல இந்த வெங்காயத்தை வாங்கி, வடகத்தை தயாரித்து விடலாம்.
சின்ன வெங்காயம் உங்களுக்கு எவ்வளவு தேவையோ 2 கிலோ, 3 கிலோ உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு கிலோ வாங்கி அதன் தோலை உரித்து வச்சுக்கோங்க. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலும் வத்தல் செய்யலாம். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அதில் நல்லெண்ணெய் உப்பு கலந்து வெயிலில் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அதில் நல்லெண்ணெய் உப்பு கலந்து வெயிலில் மூன்று நாட்கள் காய வைத்து எடுத்து வைக்கவும்.
ஒரு கிலோ வெங்காயத்திற்கு, ஒரு 25 கிராம் நல்லெண்ணை போதுமானது, வெங்காய வத்தல் இது ஒரு முறை, இதே இன்னொரு முறையில் இதை சேர்த்தும் செய்யலாம். உருண்டையை எடுத்து தயாரிப்பதற்கு முன்பு, வெங்காயம் நறுக்கியதும் அதனுடன் உப்பு, கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத் தூள், நல்லெண்ண சேர்த்து கூட வெயிலில் காயவைத்து வத்தலாக தயாரிக்க முடியும். உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி இந்த இரண்டு முறையிலும் செய்து எடுத்து வைக்கலாம்.
சின்ன வெங்காய புளிக்குழம்பு வைக்கும் போது யூஸ் பண்ணிக்கலாம். பெரிய வெங்காயத்தை, உப்பு, நல்லெண்ண சேர்த்து அதைக் காய வைத்து எடுத்து வைக்க. காய்கறி எல்லாம் தாளிக்கும் போது அதற்கு பெரிய வெங்காயத்தை உபயோகபடுத்த முடியும். இப்ப இந்த வெயில் காலத்தில் தயார்படுத்தி வைப்பதால். மழைக் காலங்களில் விலை ஏறும் போது வைத்து உபயோகபடுத்த இது பயன்படும். ட்ரை பண்ணி பாருங்க.
nice mam