ஹல்லோ லேடீஸ் இந்த அறிகுறிகள் இருக்கா… அப்போ இதெல்லாம் உங்களுக்கான நிவாரணங்கள்..!!
பெண்களுக்காக மட்டுமே
நாம் போன பதிவில் பார்த்தது, நம் முன்னோர்கள் நமக்கு கூறிய வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட கூடிய மாதவிடாய் இறுதி நிலை பற்றியும் பார்த்தோம். மெனோபாஸ் என்ற நிலையை ஒவ்வொரு பெண்ணும் கடக்க வேண்டும். அதற்கு முன்னர் நாம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்வது அவசியம். நாம் நம் உடலை எப்படி காத்து கொள்வது, அதை எப்படி எதிர் கொள்வது போன்ற பல விஷயங்களை தெரிஞ்சுகிட்டிங்க நெனைக்கிறேன். இந்த பதிவில் அதற்கான சில நிவாரணங்களை தெரிஞ்சுக்கலாம்.
உண்மையிலே மாதவிடாய் நிற்பதற்கு பத்து மாதம் முன்பாகவே, மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் தோன்றும். பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நிற்றலுக்கான அறிகுறிகள் குறுகிய காலமே நீடிக்கும். சரியான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், சிறிது உடற்பயிற்சி செய்யுங்கள், வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திகோங்க, இதனால பெருமித உணர்வை ஏற்படுத்தி, மாதவிடாய் நின்ற பின்னும், நீண்ட காலம் நலமாக வாழ்க்கை வாழ்ந்திட உதவும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாதவிடாய்க்கான சில நிவாரணங்கள்
ஒரு ஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை சந்தன தூளை கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய் பிரச்சனையை தீர்க்க உதவும். ஒரு டம்பளர் பாலில் சதாவாரி மூலிகை அல்லது அஸ்பாரகஸை சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர மாதவிடாய் நின்ற பெண்ணுக்கு நல்லது. காபி, தேனீர் தவிர்த்து சுண்ணாம்பு, மக்னீசிய சத்துள்ள உணவை எடுத்து கொள்ள வேண்டும். உடல் பருமனை குறைக்க வேண்டும். இதனால் எலும்பு வலிமை குறைவு சரிசெய்யலாம்.
மாதவிடாய் நின்ற பின் எலும்பு எடை அளவு குறையும். கீரை வகைகள், காய்கறிகள், சோயா பால், குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள், முதலியன ஏற்றதாக இருக்கும். சரியான உணவு – கைக்குத்தல் அரிசி, ஓட்ஸ், முழு உணவு ரொட்டி, கார்போஹைட்ரேட் உணவுகள், கொண்டை கடலை வகைகள், சோயா போன்ற உணவுகள் எலும்பு பலம் பெற உதவி புரியும் இயற்கை உணவுகள் எனவே இதெல்லாம் சாப்பிடுங்க.
போதுமான அளவு தண்ணீர் குடிங்க. நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கோங்க. செயற்கை இனிப்பூட்டிகளையும், ரசாயன பொருட்கள் உள்ள பதப்படுத்திய உணவை தவிர்த்து கொள்ளுங்கள். சர்க்கரை கலந்த உணவை குறைத்து கொள்ளுங்கள். பால் பொருட்கள் போன்ற கொழுப்பு அதிகள் உள்ள உணவை எடுக்காதிங்க. இதெல்லாம் நியாபகம் வச்சுக்கோங்க உங்க உடல் நலத்தை பேணி காத்து கொள்ளுங்கள்.