மழை வெள்ளதிற்கான வாய்ப்பு!
இந்தியாவின் மத்தியப் பகுதியில் 24 மணி நேரத்தில் வெள்ள அபாயம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியபிரதேசம், மும்பை, மகாராஷ்டிரா, ஒடிசா சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து காரணமாக நாட்டின் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. மழையின் அளவு அதிகரிப்பதன் காரணமாக ஆங்காங்கே வெள்ளம் அடித்துச் செல்கின்றது.
மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய இந்தியாவில் கடும் மழை மற்றும் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் ஐந்து நாட்கள் வடகிழக்கு மாநிலங்களில் மழை கொட்டும். வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது.
ராஜஸ்தான், குஜராத் பகுதிகள் ஆகியவையும் குணமாகும். உத்தரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா, கோவா போன்ற மாநிலங்கள் கவனமாக இருக்க வேண்டும். இனிவரும் 10 நாட்களுக்கு எங்கு எப்படி என்று சொல்ல முடியாத அளவுக்கு மழையானது ஆங்காங்கே அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றது. வடகிழக்கு மாநிலங்களில் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் ஏழு மாநிலங்களும் நாகலாந்து, மிசோரம் மணிப்பூர், திரிபுரா, சத்தீஸ்கர் ஆகியவை அனைத்தும் பெருமளவில் மழைநீர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அனைத்தும் குறிப்பிட்ட மாநிலங்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளது. மாநில அரசுகளும் விரைந்து செயல்படுகின்றன இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்படும் என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிற்கு இது அடுத்த சோதனை ஆகவும் இருக்கலாம் ஆதலால் எச்சரிக்கையாக அரசு திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியமாகின்றது. மக்களின் நலன் என்பது முக்கியமாகின்றது. மாவட்டங்கள் மாநிலங்கள் நிர்வாகங்களைச் சிறப்பாகக் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமையாகும் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மழையின் வேகம் அதிகரிக்கும் முன்பே பள்ளப் பகுதியை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கலாம். அரசுகளும் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒடிசா மாநிலங்களில் ஏற்பாடுகளை எல்லாம் அரசு கவனிக்க வேண்டியது அவசியமாகின்றது. இறுதி நேரம் அவசரகதி பணியை விட்டு ஆசுவாசப்படுத்தி செய்வோமாக