இந்தியாவில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது. அந்த வகையில் இந்தியாவில் எங்கெங்கெல்லாம் மழை பெய்யும் என்பதை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குத் தீவிர கனமழை இந்தியாவின் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த நிலை அரபிக் கடலிலும் காற்றழுத்த தாழ்வு நீடிப்பதால் ஈரப்பதம் இருக்கின்றது. இதன் பொருட்டு மழை கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. இந்தியாவில் இன்னும் வரும் மூன்று நாட்களுக்கு வடக்கில் இமாச்சலப் பிரதேசம் முதல் தெற்கில் தமிழ்நாடு வரை பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டும்போது இடியும் மின்னலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. மேற்குப் பகுதியான குஜராத் கோவா மகாராஷ்டிரா மாநிலங்கள் ஐந்து நாட்கள் மழை பெய்யலாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு அதே போன்று கேரளம் கர்நாடகாவில் மழை பெய்யும்.
ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானாவில் தீவிர மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. தமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்வதற்கு வாய்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது ஒடிசாவில் வரும் நான்கு நாட்களுக்குச் சூறாவளியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கொரோனா காலம் என்பதால் மக்கள் இந்த மழை காலத்தில் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்ரார்கள். இதனை அடுத்து மழை நீர் தேங்காதவாறு மற்றப் பகுதிகள் அனைத்திலும் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்படுகின்றனர். மாவட்ட நிர்வாகங்கள் இதனை இதனைத் தொடர்ந்து ஆயுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது
ஓடிசா மாநிலத்தில் சூறாவளியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் இதற்கு ஒடிசா முகாம்கள் தொடர்பாக ஆயுத்தப் பணியைப் பின்பற்ற வேண்டும்.