சமையல் குறிப்புவாழ்க்கை முறை

கார்போஹைட்ரேட் நிறைந்த கோதுமை வெஜிடபிள் கிச்சடி ரெசிபி

கோதுமை வெஜிடபிள் கிச்சடி ரெசிபி கார்போஹைட்ரேட் நிறைந்த காய்கறிகளை சேர்த்து செய்யப்படும். ஹெல்தியான உணவுகளில் ஒன்றாக கோதுமை, காய்கறி சேர்த்து கிச்சடி செய்து கொடுக்கலாம்.

நாம் விரும்பிய காய்கறிகள் அனைத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். அனைத்தும் கட் செய்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் இதை சமைத்து விடலாம். கோதுமை கிச்சடி அல்லது கோதுமை உப்புமா என்று அழைக்கலாம்.

கோதுமை கிச்சடி உப்புமா

தேவையான பொருட்கள் : உடைத்த கோதுமை அல்லது கோதுமை ரவை கால் கிலோ, கோஸ் அரைக்க கப், கேரட் அரை கப், பட்டாணி கால் கப், குடைமிளகாய் கால் கப், தக்காளி கால் கப், வெங்காயம் அரை கப், நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் சிறிது, சிவப்பு மிளகாய் 3, வறுத்த சீரகம் கால் ஸ்பூன், உப்பு தேவையான அளவு. நெய் இரண்டு ஸ்பூன், எலுமிச்சை சாறு தேவையான அளவு, தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை : ஒரு வாணலியில் நெய் சேர்த்து சூடானதும் உடைத்த கோதுமையை சேர்த்து வதக்க வேண்டும். நான்கு நிமிடங்கள் வறுத்து எடுத்து வைக்கவும். ஒரு கப் கோதுமைக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கிய பிறகு காய்கறிகளை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக பட்டாணி சேர்த்து வதக்கவும்.

தக்காளியை சேர்த்து வதக்கிய பிறகு, நீர் விட்டு மூடி நன்கு வேகவிடவும். கடைசியாக குடை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து, சீரகம் சேர்த்து, நன்றாக வதக்கவும். கடைசியாக குக்கரில் வேக வைத்த கோதுமை ரவை இந்த கலவையை இந்த காய்கறி கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும். இரண்டும் கலந்த பிறகு சிறிது நேரம் மீடியம் பிலிமில் வைத்து வேக விட்டு இறக்கினால் சுவையான ஹெல்தியான கோதுமை ரவை வெஜிடபிள் உப்புமா தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *