சமையல் குறிப்புவாழ்க்கை முறை

குழந்தைகளுக்கு விருப்பமான வால்நட் பிரவுனி

வெளியே சென்றாலே சாக்லேட், கேக் என்று இன்றைய குழந்தைகள் அடம் பிடிக்கின்றனர். வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் கோபம் கொள்கின்றனர். அந்த அளவிற்கு பைத்தியமாக இருக்கின்றனர் குழந்தைகள். இவர்களுக்கு விருப்பமான வால்நட் பிரவுனியை கடையில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இந்த வால்நட் பிரவுனியை வீட்டிலேயே செய்தால் எப்படி இருக்கும் வாங்க பார்க்கலாம்.

வால்நட் பிரவுனி

தேவையான பொருட்கள்

வால்நட் 200 கிராம், டார்க் சாக்லேட் 300 கிராம், வெண்ணெய் கால் கிலோ, சர்க்கரை கால் கிலோ, பிரவுன் சுகர் கால் கிலோ, பேக்கிங் சோடா 10 கிராம், பேக்கிங் பவுடர் 10 கிராம், மைதா மாவு முக்கால் கிலோ, பால் அரை லிட்டர்.

செய்முறை விளக்கம்

பால், சர்க்கரை மற்றும் வெண்ணெய் போன்றவற்றை ஒன்றாக சேர்த்து க்ரீம் பதத்தில் நன்றாக கலந்து அடித்து வைக்கவும். சாக்லேட்டை உருக்கி இந்த கலவையில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பேக்கிங் சோடா, பால், வால்நட், மைதா மாவு ஆகியவற்றை இதில் கலந்து நன்றாக பிசைந்து, எல்லாவற்றையும் ஒன்றாக கட்டி சேராமல் நன்றாக கலக்கி, பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி ஊற்றி அரைமணி நேரம் 170 டிகிரி செல்சியஸில் வைக்கவும்.

பிறகு வெளியே எடுத்து ஆற வைத்து விருப்பமான வடிவங்களில் வால்நட் பிரவுனியை வெட்டி வெண்ணிலா ஐஸ் கிரீம் உடன் பரிமாறலாம். இனி கடைக்குப் போகாமல் வீட்டிலேயே தயாரிப்பதால் இந்த ஈசியான வால்நட் பிரவுனியை பார்த்தாலே சாப்பிட தூண்டும். உடனடியாக செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற ஆசையை தூண்டுகிறதா செய்து பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *