ஆரோக்கியம்சமையல் குறிப்புமருத்துவம்யூடியூபெர்ஸ்

வல்லாரையில் சூப்பரான கூல்ரிங்ஸ் குட்டீஷ்க்கு செமையான எனர்ஜி ட்ரிங்க்ஸ் ரெடி

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலே ரொம்ப நல்லது ஆனால் அந்த உணவுகளையும் புதுப்புது டேஸ்ட்ல புதுப்புது வெரைட்டியா சாப்பிட்டா எப்படி இருக்கும். நமக்கு புடிச்ச பாஸ்ட்ஃபுட் டேஸ்ட்டிலயே ஆரோக்கிய உணவும் இருந்தால் கண்டிப்பா நம்ம அந்த சான்ஸ் மிஸ் பண்ணாம சாப்பிடுவோம். அதுலயும் நம்ம வீட்டு குழந்தைகள் எல்லாருமே சாப்பாடு சாப்பிடணும் அப்படின்னாலே ஒரே ஓட்டமோ ஓடிவிடுவார்கள். அவங்களை சாப்பிட வைக்கணும் அப்படிங்கற ஒன்னு நமக்கு ஒரு பெரிய வேலையா இருக்கும்.

ஆனால் எப்படியும் என்னவா இருந்தாலும் ஏதாவது நீர் ஆதாரமா கூல்ரிங்ஸ் மாதிரி கொடுத்தா டக்குனு குடிச்சிட்டு போயிடலாம் அப்படின்னு நினைச்சு குடிச்சுருவாங்க. அப்படி அவங்க விரும்பி குடிக்கிற கூல்டிரிங்ஸ் வல்லாரைல அப்படின்னா எப்படி இருக்கும். நாம இதுவரைக்கும் வல்லாரையில் சட்னி, பொரியல் என ஏதேதோ பார்த்து இருப்போம். ஆனால் வல்லாரையில் கூல்ரிங்ஸ் எப்டி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வல்லாரை – 15 முதல் 20 வரை

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 3

சீரகம் – சிறிதளவு

நெய் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சுத்தம் செய்து வைத்த வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு, சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வானலியில் சிறிதளவு நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய்யின் மனம் குளிர் பானத்திற்கு நல்ல சுவையை கொடுக்கும். அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நாம் அரைத்து வைத்த வல்லாரை விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்…பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கடைசியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடவும்…இதனை நீங்கள் சூடாகவும் குடிக்கலாம்.இல்லையேல் சிறிது நேரம் ஆற வைத்து பின்பு அதில் ஐஸ்கட்டி சேர்த்து கூல்ரிங்ஸ் மாறி குடிக்கலாம்.

இந்த குளிர்பானம் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அள்ளித்தரும்.

குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.

மூளை வளர்ச்சி அடைய வல்லாரை கீரை சாப்பிட்டால் சிறந்த மருந்தாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *