கமகமக்கும் ஸ்பைசி பச்சைபயறு
நவராத்திரி தினங்களில் அம்மனுக்கு படைப்பதற்காக வேக வைத்த பச்சைபயறு நைவேத்தியம் எடுத்து வைத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு மட்டும் இந்த பச்சைபயறு தாளித்து கொடுக்கலாம்.
- நவராத்திரி தினங்களில் கலர்ஃபுல் பச்சைபயறு செய்து கொடுங்க.
- கமகமக்கும் ஸ்பைசி பச்சைபயறு.
- தேங்காய் எண்ணெயில் தாளிப்பது இதன் சுவை கூடும். எவ்வளவு செய்தாலும் உங்களுக்கு மிச்சம் இருக்காது.
ஸ்பைசி பச்சைபயறு
தேவையான பொருட்கள்
கால் கிலோ பச்சைபயறு, அரை கப் பெரிய வெங்காயம் நறுக்கியது, ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கடுகு, ஜீரகம், உப்பு, தேங்காய் எண்ணெய் தாளிப்பதற்கு தேவையான அளவு. மிளகாய்த்தூள், மிளகுத்தூள் தலா ஒரு ஸ்பூன். தண்ணீர், கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
பச்சைபயறு முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து விடவும். 1 நாட்களுக்கு முன்பே 5 மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து ஒரு ஈரத்துணியில் பச்சைபயறு வைத்து இறுக்கமாக சுற்றி ஒரு பாத்திரத்தில் காற்றோட்டமாக வைத்துவிட்டால் முளை கட்டி விடும். நேரமிருந்தால் முளைக்கட்டி வைத்த பச்சைபயறு சமைக்கலாம்.
ஊற வைத்த பச்சைபயறு அல்லது முளைக்கட்டிய பச்சைபயறு குக்கரில் பச்சைபயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் வைத்து சிறிது உப்பு சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து சிறிய வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிளகாய் தூள் சேர்த்து, மஞ்சத்தூள் ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.
பிறகு வேக வைத்த பச்சைபயறு சேர்த்து சிறிது உப்பு போட்டு 2 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். விருப்பப்பட்டால் தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான ஸ்பைசி பச்சைபயறு தயார்.