சமையல் குறிப்புவாழ்க்கை முறை

கல்யாண வீட்டு ரசம் ரெசிபிகள்.!

வெயில் காலம் முடிந்து விடும் நிலையில் இனி காற்று காலம், அடுத்து மழை காலம் என்ற சீசன் தொடங்கி விடும். இந்த நேரத்தில் தினமும் குழம்பு, தயிர் என்று சாப்பிட்டு வந்தவர்கள். இனி ரசம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். டிபரண்ட் ஸ்டைலில் வித்தியாசமா என்னென்ன ரசம் வைக்கலாம் வாங்க பார்க்கலாம்.

சாதா ரசம்

தேவையான பொருட்கள் : புளி கரைசல் அரை கப், தக்காளி 2 நறுக்கியது கால் கப், பூண்டு ஐந்து பல், பச்சை மிளகாய் 2, சீரகம் கால் ஸ்பூன், மஞ்சள் தூள் கால் ஸ்பூன், உப்பு, எண்ணெய் தேவைக்கு ஏற்ப.

தாளிக்க : கடுகு, சோம்பு, பெருங்காயத் தூள்.

செய்முறை : தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரைத்துக் கொண்டு தோலுடன் பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் தட்டி ரசத்துடன் சேர்க்கவும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காய பொடி போட்டு தாளித்துக் கொட்டவும். கடைசியாக மல்லித்தழை தூவி பரிமாறலாம்.

பருப்பு ரசம்

தேவயான பொருட்கள் : துவரம் பருப்பு 100 கிராம், கடலைப் பருப்பு ஒரு தேக்கரண்டி, மிளகு, சீரகம் அரை தேக்கரண்டி, மிளகாய் கொத்த மல்லி சிறிது, கறிவேப்பிலை சிறிது, பூண்டு, புளி கரைசல் அரை கப், உப்பு, எண்ணெய், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தேவையான அளவு.

செய்முறை : துவரம் பருப்பை, மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கடலைப் பருப்பு, மிளகு, சீரகம், கொத்தமல்லி, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும். புளி, உப்பை கரைத்து கொண்டு, அத்துடன் இந்த பொடியை சேர்த்து நீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி, நன்றாகக் கொதித்ததும், வெந்த பருப்பையும் கலந்து மேலும் நீர் விட்டு சிறிது நேரம் கழித்து இறக்குங்கள். சுவையான பருப்பு ரசம் தயார்.

தக்காளி ரசம்

தேவயான பொருட்கள் : பெரிய தக்காளி பழுத்து 3, மிளகு கால் ஸ்பூன், சீரகம் கால் ஸ்பூன், பூண்டு 5 பல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிது, ரசப்பொடி ஒரு ஸ்பூன், உப்பு, எண்ணெய், கடுகு தேவைக்கு ஏற்ப.

செய்முறை : தக்காளியை நன்கு பிசைந்து எடுத்து வைக்கவும். உப்பு, ரசப்பொடி தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு தக்காளியை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, சீரகப் பொடி போட்டு வெந்ததும், ரசத்தை ஊற்ற வேண்டும். இதனுடன் வெட்டிய தக்காளியையும் சேர்த்து இரண்டு கொதி வந்ததும், கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு இறக்கவும்.

சுவையான தக்காளி ரசம் தயார். கொதிக்கும் போது கொத்தமல்லி தழை போட்டு இறக்கி விடவும். மேற்கூறிய இந்த ரசத்தை சாதா ரசம், தக்காளி ரசம், பருப்பு ரசம் இவை மூன்றையும் ட்ரை பண்ணி பாருங்க. இது புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *