ஆரோக்கியம் தரும் ஊட்டம் நிறைந்த!. பட்ஜெட்டிற்கு ஏற்ற உணவுகள்!
நாம் தினமும் உண்ணும் உணவை முறையாக உட்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைத்துவிடும். மருந்து மாத்திரைகளை எடுக்காமல் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும்.
- தினமும் உண்ணும் உணவை முறையாக உட்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
- மருந்து மாத்திரைகளை எடுக்காமல் ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும்.
- விலை மலிவாக இருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்வது அவசியம்.
உடல் பிரச்சனைகளை தவிர்க்க
விலை அதிகமாக இருக்கிறது என்பதால் அதை வாங்கி உண்ணாமல் தவிர்த்து விடுவோம். நமக்கு தேவையான உணவுகள் பட்ஜெட்டில் கிடைக்கும்போது அதை எடுத்துக்கொள்ளலாம். சீசனுக்கு தகுந்த மாதிரி விலை மலிவாக கிடைக்கும் உணவுகளையும் எடுத்துக் கொள்வது அவசியம். இதனால் சளி, காய்ச்சல், போன்ற பலவித உடல் பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
சீசனுக்கு கிடைப்பதால் அந்தந்த பழங்கள் உடலுக்கு ஏற்றதாக இருக்கும். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி, பிற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த பட்டாணி விலை குறைவாக கிடைக்கிறது. முட்டை விலை மலிவானது. நான்வெஜ் கம்பேர் செய்யும் போது முட்டை விலை மலிவு தான்.
புரதம் நிறைந்த, இதய நோய்களைத் தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, முட்டையில் இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற மினரல்கள் அடங்கியுள்ளன. வாரம் மூன்று முறை எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் எடை கூடும் என்பது தவறான கருத்து. இதில் கால்சியம் இருப்பதால் டயட் ஃபாலோ செய்பவர்களும் இதை உண்ணலாம்.
உடல் ஆரோக்கியம் மேம்பட
கீரையை விரும்பாதவர்கள் உணவுடன் பருப்பு கூட்டு செய்து சாப்பிடலாம். நார்ச்சத்து, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த இந்த கீரை உடலுக்கு பல நன்மை தரக்கூடியது. உடலின் செரிமான சக்தி அதிகரித்து உடலுக்குத் தேவையான கால்சியம், புரதம், பொட்டாசியத்தை கொடுக்க தயிர் உதவுகிறது. தினசரி தயிர் கலந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தயிர் உண்பதால் உடல் எடை கூடாது. இதில் புரதச் சத்து உள்ளன.
கோதுமை உணவில் சேர்த்துக் கொள்வதால் கலோரிகள் கிடைக்கும். புரதம், நார்ச்சத்து நிறைந்துள்ளன. மாவாக அரைத்து நமக்கு விருப்பமான உணவாக செய்து சமைத்து சாப்பிடலாம். பாஸ்தா, இடியாப்பம், சப்பாத்தி, பூரி என விருப்பமான வகையில் உணவு சமைத்து சேர்த்துக்கொள்ளலாம். செரிமானத்தை தூண்டும். இதய நோய்களை தடுக்கவும் பயன்படுகிறது.
எனர்ஜி கிடைக்க
ஓட்ஸ் வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். இது அளவாக சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். வாழைப்பழத்தில் மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, நியாசின், போலேட், பி, சி போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இதை உண்பதால் எனர்ஜி கிடைக்கிறது.
விலை மலிவாக இருப்பதால் இதை உணவில் எடுத்துக்கொள்வது அவசியம். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடிய பாலிபெனால்ஸ் இருப்பதால் பயிறு வகைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. முடி வளர்ச்சியைத் தூண்டவும், இதயம் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது.