ஆரோக்கியம்சமையல் குறிப்புயூடியூபெர்ஸ்

Moong Dal idli recipe : ருசியில் மிஞ்சும் ஆரோக்கிய பஞ்சு போன்ற பாசிப்பருப்பு இட்லி செய்வது எப்படி??

இட்லி என்பது இந்திய பாரம்பரியத்தின் முக்கிய உணவாக கருதப்படுகிறது.வெளிநாட்டு மக்கள் கூட நமது இட்லியை விரும்பி ருசித்து சாப்பிடுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் காய்ச்சல் சமயத்தில் நோயாளிகளுக்கு கொடுக்கும் மருத்துவம் நிறைந்த உணவாகவும் உள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் காலை நேரத்தில் பரபரப்பாக வேலை செய்யும் பொழுது எளிதாக தினமும் செய்யும் ஆரோக்கிய உணவாக இட்லி உள்ளது. இட்லியில் உளுந்தின் பயன்களும், அரிசியின் பயன்களும் மற்றும் குளிர்ச்சி தரும் வெந்தயத்தின் பயன்களும் நிறைந்து காணப்படுவதால் இட்லி ஆரோக்கிய உணவாகவும் பாரம்பரியம் மாறாமல் இன்றும் விரும்பி அனைவராலும் உண்ணப்படும் பாரம்பரிய உணவாகவும் உள்ளது.

அம்மாக்கள் குழந்தைகளுக்கு இட்லி பிசைந்து கொடுப்பது வழக்கம் அதேபோல் வயதானவர்கள் அதிகம் ஜீரணம் ஆகாததால் விரும்பி உண்ணும் உணவும் இட்லி தான். பண்டிகை காலங்களில் வீட்டில் காலை நேர உணவாக உள்ளதும் இட்லி தான் இட்லி தான். விசேஷ வீடுகளில் காலை நேர டிபனில் முக்கிய இடம் பிடிப்பதும் இப்படிதான் இட்லி இல்லாத பந்தியே இருக்க முடியாது. இட்லி என்பது நம் உணவுடன் கலந்த உணர்வாக உள்ளது. இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த இட்லியை மேலும் ஆரோக்கியமாகவும் புதுவித சுவையிலும் எவ்வாறு சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பாசிப்பருப்பு – 1 கப்

இட்லி அரிசி – 2 டேபிள் ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 4

கறிவேப்பிலை – சிறிதளவு

தனியா – 1 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 கப்

உப்பு – தேவைக்கு ஏற்ப

பாசிப்பருப்பு இட்லி செய்முறை

முதலில் பாசிப்பருப்பு மற்றும் இட்லி அரிசி ஆகியவற்றை நன்கு கழுவிய பின்பு சுத்தமான நீரில் மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு உரிய பின்பு பாசிப்பருப்பு மற்றும் இட்லி அரிசியுடன் கறிவேப்பிலை சின்ன வெங்காயம் தனியா சீரகம் மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து இட்லி மாவுக்கு எப்பொழுதும் நாம் அரைக்கும் பதத்தில் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இட்லி பாத்திரத்தில் துணி அல்லது வாழை இலையில் நாம் அரைத்தெடுத்த இட்லி மாவை ஊற்றி ஆவியில் வேக வைக்க வேண்டும். பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆகியவை வந்த பின்பு அடுப்பை அணைத்துவிட்டு இட்லிகளை மெதுவாக வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி எடுத்துக் கொள்ளவும். அவ்வளவுதான் சூடான ஆரோக்கியமான பஞ்சு போன்ற பாசிப்பருப்பு இட்லி ரெடி.

பாசிப்பருப்பு இட்லிக்கு ஏற்ற காரசாரமான காரச் சட்னி அல்லது புளிப்பு சட்னி சேர்த்து பரிமாற அவ்வளவு சூப்பராக இருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரசித்து ரசித்து சாப்பிடுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *