Healthy Kavuni raise puttu:ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கவுனி அரிசி புட்டு.. இந்த மாதிரி செஞ்சு அசத்துங்க
இப்பொழுது அனைவரும் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்த்து விட்டு மீண்டும் பாரம்பரிய உணவிற்கு மாறி வருகின்றனர். எல்லா வீடுகளிலும் தற்பொழுது கம்பு ,ராகி ,கோதுமை ,வரகு என அனைத்துவித அரிசிகளையும் உபயோகிக்கின்றனர். மீண்டும் பாரம்பரிய உணவுகளை தேடி தேடி உண்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதேபோல் கடைகளிலும் பாரம்பரிய சமையல் என்ற முறையில் பழங்கால உணவுகளை மீட்டெடுத்து நமக்கு வழங்கி வருகின்றனர். கம்பு தோசை, வரகு பொங்கல், ராகி தோசை என பல்வேறு புதிய உணவுகளை இப்பொழுது சாப்பிட தொடங்கி விட்டனர். இதேபோல் பாரம்பரிய உணவுகளில் மிக மிக ஆரோக்கியமான உணவான ஒரு ரெசிபியை இப்போது பார்க்கலாம்…
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கவுனி அரிசி புட்டு
கவுனி அரிசி மிகுந்த ஆரோக்கியத்தை தரக்கூடியது. உடல் சூடு தணிந்து வயிற்றில் உள்ள புண்கள் குணமாக உதவுகிறது. உடல் பருமன் உள்ளவர்கள் இந்த அரிசியில் கூல் செய்து சாப்பிட்டு வர உடல் எடை விரைவில் குறையும். மேலும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளுக்கும் இது ஒரு மருந்தாக உள்ளது. கவுனி அரிசி பாரம்பரிய உணவு.இதில் சாப்பாடு கூழ் என செய்து சாப்பிடலாம். ஆனால் நமக்கு இப்பொழுது எல்லாம் புதுமையை தேடி போவது ஒரு புதுவித அனுபவமாக உள்ளது எனவே ஆரோக்கியத்தையும் புதுவிதமான முறையில் சாப்பிடலாம். கவுனி அரிசியில் புட்டு செய்து அசத்தலாம்.
மேலும் படிக்க : உளுந்து பால் தரும் உலக லெவல் ஆரோக்கியம்
தேவையான பொருட்கள்
கவுனி அரிசி – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
குங்குமப்பூ – 1 டீஸ்பூன்
முந்திரி – 15
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் முதல் நாள் இரவே கவுனி அரிசியை மூன்று அல்லது நான்கு முறை கழுவிய பின்பு ஊறவைத்து விட வேண்டும். தண்ணீர் சற்று அதிகமாகவே ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள் மறுநாள் காலையில் நன்றாக ஊறிய கவுனி அரிசியை ஒரு குக்கரில் போட்டு அரிசி ஊறவைத்த தண்ணீரையே குக்கரில் ஊற்றி விசில் விடவும்.மூன்று அல்லது நான்கு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் விடவும்.பின்பு நன்றாக வெந்த அரிசியில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள், நெய் ,பாலில் கலந்த குங்குமப்பூ, சற்று நெய் விட்டு வறுத்த முந்திரி ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
மேலும் படிக்க : நம் ஆரோக்கியம் நம் கையில் தானே இதோ உங்களுக்கான டிப்ஸ்
புட்டு செய்யும் நண்பர்களுக்கு ஒரு குறிப்பு நீங்கள் கவுனி அரிசியை நன்றாக ஊற வைத்து அதிக விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சர்க்கரை தேங்காய் ஆகியவற்றை கலந்த பின்பு கொஞ்சம் அரிசியை வேக வைத்துக் கொள்ளலாம் என நினைத்தால் அது வேகாது . எனவே சர்க்கரை தேங்காய் துருவல் இவை அனைத்தையும் கலப்பதற்கு முன்பாகவே அரிசி வெந்து உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் திரும்பவும் விசில் விட்டு வேக வைத்து எடுத்த பின்பு சர்க்கரை கலக்கவும்.