hair growth oil :கரு கருவென கருங்கூந்தலுக்கு இதை உடனே செய்யுங்க!!!
பெண்கள் என்றாலே அழகுதான். ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது அவளது முக பாவனைகள், உடல், இடை ஆகியவை இல்லாமல் முக்கியமான ஒன்றுடன் ஒப்பிடுவது என்றால் அது அவளுடைய கூந்தலாக தான் இருக்கும். கருங்கூந்தலுடன் தலைவி காத்திருந்தாள் என்று நமது புராணங்களிலும் தலைவியைப் பற்றி வர்ணிக்கும் போது அவளது கருப்பான கூந்தலை முன்னுதாரணமாக இருக்கும்.
இவ்வாறு பெண்ணின் அடையாளமாக இருக்கும் கூந்தல் இன்றைய காலகட்டத்தில் பல பெண்களுக்கு இளம் வயதிலேயே இளநரை, செம்பட்டை அடிப்பது , அதிகமாக முடி கொட்டுவது போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. அதற்கு காரணம் இன்றைய சூழலில் பரபரப்பாக வேலைக்கு செல்வதை மட்டுமே முக்கியமாக நினைக்கிறோம் . நம்மை நாம் கவனித்துக் கொள்ள மறந்து விடுகிறோம். பரபரப்பான இன்றைய உலகில் இதை அனைத்தையும் செய்வது என்பது சாத்தியமல்ல என்பது உண்மைதான். ஆனாலும் எளிய முறையில் உங்கள் முடியை பராமரிக்க உங்களுக்கான ஒரு டிப்ஸ்.
தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 500 ml
கறிவேப்பிலை – 1 கப்
வேப்பிலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
கரிசலாங்கன்னி – 1 கப்
பெரிய நெல்லிக்காய் – 3
மருதாணி இலை – சிறிதளவு
வெந்தயம் – 1 டீஸ்பூன்
செம்பருத்தி – 5
ஓமம் – சிறிதளவு
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை
மேலும் படிக்க : வீட்டிலேயே கற்றாழை மூலம் ஹேர் சீரம் செய்வோம்..!
செய்முறை
ஒரு வாணலியில் 500ml சுத்தமான தேங்காய் எண்ணெயை எடுத்து ஊற்றிக் கொள்ளவும். தேங்காய் எண்ணெய் மிதமான சூடானதும் அதில் கறிவேப்பிலை, வெந்தயம், பச்சை கற்பூரம், கரிசலாங்கண்ணிக் கீரை ,செம்பருத்தி, மருதாணி ,வேப்பிலை , கொட்டை நீக்கிய நெல்லிக்காய், அறுத்து வைத்த சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். நாம் சேர்த்த பொருட்களின் சத்து எண்ணெயில் இறங்கி எண்ணெய் கருப்பு நிறமாக மாறும்.
நாம் சேர்த்த இலைகள் அனைத்தும் மொறுமொறுவென பொரிந்து வரும். அந்த நேரத்தில் அடுப்பை அணைத்து விடவும். பின்பு நாம் காய்ச்சிய எண்ணையை நன்றாக ஆற வைத்து ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணையை தினமும் அல்லது வாரத்தில் மூன்று முறை தேய்த்து வர இளநரை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் நீங்கி முடி கருப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும். முடி கொட்டுவது என்ற பிரச்சனையே உங்களுக்கு வராது.
டிப்ஸ் : நாம் காய்ச்சிய எண்ணையை வடிகட்டி எடுத்துக் கொள்கிறோம். வானலியில் உள்ள மொரு மொரு இலைகளை நீங்கள் தலையில் வைத்து அரை மணி நேரம் கழித்து குளித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : ஹைபிரிட் கலப்பின உணவுகள் சத்து மிக்கவையா! இவற்றை சாப்பிடலாமா?
Image credit : Google search