டாப்பா வரனுமா இது வேனுங்க. வலவலனு இருக்குதுன்னு ஒதுக்காதிங்க!
ஞாபக சக்தி குறைந்தவர்கள் வல்லாரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வல்லாரைக் கீரை உண்பதால் மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. வல்லாரை உண்டோர் இடம் மல்லாட கூடாது என்ற ஒரு பழமொழி இருக்கிறது. என்னடா இது என்று கேட்கிறீர்களா? சரஸ்வதி கீரை என்று அழைக்கப்படக் கூடிய வல்லாரைக் கீரையைப் பற்றி தான் சொல்கிறேன். ஏன் இதற்கு இப்படி பெயர் வந்தது என்று யோசிக்கிறீங்களா? ஆமாங்க.
- வல்லாரைக் கீரை உண்பதால் மூளை நன்கு செயல்பட தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது.
- இந்த வல்லாரை இலை தாவரம் சக்தி அளிக்கக் கூடிய டானிக்.
- வல்லாரை நினைவாற்றலையும், கவனத்தையும், ஈடுபாட்டையும் அதிகரிக்க உதவுகிறது.
மன நோய்க்கு வல்லாரை
தினமும் அதிகாலை எழுந்து மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக சாப்பிட மன நோய்கள் மறையும். காய்ச்சல், ஆஸ்துமா நோய்கள், உடல் சோர்வு நீங்கும் என்று கூறப்படுகிறது. பற்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்கள் தொண்டை கட்டு உடல் புண்கள் போன்றவற்றை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது.
வல்லாரை உண்ணும் போது இதை ஒதுக்குங்க
இந்த வல்லாரை கொண்டு பல்துலக்க பற்களின் மஞ்சள் நிறம் மாறும். மேலும் இந்த கீரையை உண்ணும் போது கசப்பு தன்மை உடைய காய்கறிகள், பாகற்காய், அகத்திக் கீரை போன்றவற்றை தவிர்க்க வேண்டும். புளிப்பு, காரம் குறைவாக எடுத்துக் கொள்வது சிறப்பு. மாமிசத்தை அறவே ஒதுக்க வேண்டும்.
வல்லாரை உண்ண ஏராளமான சக்தி
சிறுவர்கள் அடிக்கடி உண்பதால் ஞாபக சக்தி பெறுகிறது. மருத்துவத்தில் இக்கீரையை பதப்படுத்தி சூரணம், மாத்திரை, லேகியமாகவும் விற்கின்றனர். சுண்ணாம்புச்சத்து, உயிர்ச்சத்து, இரும்புச்சத்து, ஏ, சி விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியது.
வல்லாரை நீர் நிறைந்த பகுதியில் தானாக வளரக் கூடியது. ஞாபக சக்தி குறைந்தவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள அந்த குறையை போக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.