Healthy Crab soup at home: வித்தியாச முறையில் நண்டு ரசம் வீட்டிலேயே செய்வது எப்படி??
நான்வெஜ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த புதுவிதமான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான நண்டு ரசம் எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம். கடலில் நாம் நண்டுகளை பிடித்து விளையாடி இருப்போம். அப்படி விளையாடி மகிழ்ந்த நண்டுகளை நம் உடலின் ஆரோக்கியத்திற்காக எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
பொதுவாக ரசம் என்பது தினமும் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத உணவாக உள்ளது நமது உடல் செரிமானத்திற்கு ஏற்ற உணவாக உள்ளது. ரசத்தில் பல வகை உண்டு பருப்பு ரசம், புதினா ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம் என சொல்லிக்கொண்டே போகலாம். அந்த வகையில் நான்வெஜ் பிரியர்களுக்கு பிடித்தமான மற்றும் சளி இருமல் காணாமல் போக செய்யக்கூடிய நண்டு ரசம் நம் வீட்டிலேயே எளிமையான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 5
எண்ணெய் – தேவையான அளவு
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
சோம்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
மல்லி – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
நண்டு – 1 அல்லது 2
மிளகு – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு , சீரகம் , நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் சிறிதளவு வதங்கிய பின்பு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு சுத்தம் செய்து வைத்த நண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் வதங்கிய பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும்.
அதன் பின்பு அம்மியில் சீரகம் மிளகு மல்லி மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வைத்து நன்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு எடுத்தவற்றை நண்டுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும். நண்டு நன்றாக கொதித்த பின்பு கடைசியாக கொத்தமல்லி இலைகளை சிறிதளவு தூவி அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
சூடான மற்றும் சுவையான நண்டு ரசம் ரெடி சூடாக அனைவருக்கும் பரிமாறவும்.
நண்டு ரசத்தின் பயன்கள்
நண்டு ரசம் குடிப்பதால் சளி இருமல் உடனடியாக நீங்கி விடும்.
தலைபாரம் தலைவலி ஆகியவை இருந்தால் நண்டு ரசம் குடித்தவுடன் உடனே சரியாகி விடும்
நண்டு ரசம் குடிப்பதால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவது குறைந்து விடும். நன்கு செரிமானம் ஏற்படும்.
குழந்தைகளுக்கு நண்டு ரசம் கொடுக்கும் பொழுது சுவாச கோளாறுகளில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் உடனே சரியாகிவிடும்.