ஹெல்தி அண்ட் டேஸ்டி பிரெட் ஆம்லெட்
தினமும் ஒரே உணவுகளை சாப்பிட்டு போர் அடித்துவிடும். ஏதாவது புதிதாக ட்ரை செய்ய தோன்றும். ஹெல்தி அண்ட் டேஸ்டி. டிஃபரண்ட் பிரெட் ஆம்லெட் ட்ரை செய்ய. மார்னிங் டிபன் இத செஞ்சு கொடுங்க. உங்க குழந்தைகள் குஷியாக சாப்பிடுவார்கள்.
கோதுமை பிரெட், ஸ்வீட் பிரெட், மைதா பிரட் எதை வேண்டுமானாலும் இந்த முறையில் செய்யலாம். முட்டையை அடிக்கும் போது சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். ஈவினிங் டிபன், மார்னிங் எப்ப வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்.உடலை இளைக்க விரும்புபவர்கள் இத ட்ரை பண்ணலாம். பிரெட் ஆம்லெட் செய்யலாம் வாங்க.
- ஹெல்தி அண்ட் டேஸ்டி.
- சூடாக சாப்பிட அருமையாக இருக்கும்.
- பிரெட் ஆம்லெட் செய்யலாம் வாங்க.
பிரெட் ஆம்லெட்
தேவையான பொருட்கள்
முட்டை 5, பிரட் ஐந்து, பால் அரை டம்ளர், சர்க்கரை ஒரு ஸ்பூன், வெண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை விளக்கம்
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது உப்பு, சர்க்கரை, காய்ச்சிய பால் ஒன்றாக சேர்த்து நன்றாக அடித்து விடவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெயை விட்டு முட்டைக் கலவை லேசாக ஊற்றி இதன் மேல் பிரட் வைத்து அதே பிரெட்டின் மேல் மீண்டும் முட்டை கலவையை சிறிது தேய்த்து விட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக விடவும்.
இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு நன்றாக வேகவிட்டு எடுத்து வைக்கவும். இதேபோன்று ஒவ்வொரு பிரெட் துண்டுகளையும் முட்டை இரண்டு பக்கமும் ஊற்றி எடுத்து வேக வைத்தா உடனடியாக மார்னிங் டிபன் தயார்.