சமையல் குறிப்புவாழ்க்கை முறை

வெயிலுக்கு ஏற்ற குளு குளு பொரியல்…

இப்பொழுதெல்லாம் அடிக்கிற வெயிலுக்கு எவ்வளவுதான் ஜூஸ், பழங்கள், மோர், இளநீர் என குடித்தாலும் வெயிலை சமாளிக்க முடிவதில்லை. வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் ஆகியோர் மிகவும் இந்த வெயிலால் அவதிப்படுகின்றனர். அதைவிட ரோட்டோரத்தில் வியாபாரம் செய்பவர்கள் வண்டி வாகனம் ஓட்டும் தொழிலை கொண்டவர்கள் கட்டிட தொழிலாளிகள் என எந்த தொழில் செய்பவர்களும் வெயிலால் மிகவும் பாதிப்படைகின்றனர். இவர்கள் என்னதான் தண்ணீரைக் குடித்தாலும் தாகமும் தீர்வதில்லை வெயிலும் தணிவதில்லை.இப்படி இருக்கும் சூழலில் நாம் தண்ணீரை மட்டும் குடித்தால் போதாது . தண்ணீர் சத்து நிறைந்த உணவு வகைகளை நாம் சேர்த்துக் கொள்வது மிக அவசியம் . இப்படி சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தண்ணீர் நிறைந்த காய்கறிகளை கொண்டு ஒரு சுவையான பொரியல் செய்வதை பார்ப்போம்..

தேவையான பொருட்கள்

பூசணிக்காய் – 100 கிராம்

புடலங்காய் – 100 கிராம்

பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – 1 டீஸ்பூன்

தனியா – 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் 10

பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்

தேங்காய் – அரை மூடி

எண்ணெய் – 4 டீஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

உளுந்து பருப்பு – அரை ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து

செய்முறை

புடலங்காய் மற்றும் பூசணிக்காயை எடுத்துக்கொண்டு நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு மஞ்சள் தூள் , உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக கிளறிக் கொண்டு பின்பு இதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.

பின்பு ஒரு கடாயில் தனியா , 8 காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்துக் கொள்ளவும் அதில் துருவிய தேங்காயை பொன்னிறமாக வரும் வரை வறுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவை ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

மிக்ஸியில் அரைத்து எடுத்து மசாலாவை நன்றாக வெந்து உள்ள காய்கறிகளுடன் கலந்து கிளறி விட வேண்டும் . இதில் வெல்லம் கலந்து நன்றாக மசாலா மற்றும் காய்கறி கொதிக்கவட வேண்டும். பிறகு ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுந்தம் பருப்பு , பெருங்காயத்தூள், 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தாளித்து எடுத்து கொதிக்கும் மசாலாவில் ஊற்றி சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும் அவ்வளவுதான் சூடான சுவையான வெயிலுக்கு இதமான பூசணிக்காய் புடலங்காய் பொரியல் ரெடி…

வயலகக-

இவற்றை அனைவரும் உண்டு வெயிலின் சூட்டிலிருந்து உங்கள் உடலை சீராக வைத்துக் கொள்ளுங்கள்… இந்த பொரியலை அடிக்கடி சேர்த்துவர உடலின் சூடு தணியும். வெயில் சம்பந்தமான நோய்கள் தாக்காமல் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *