குழந்தைகள் கூட விரும்பும் நெல்லி ஆயுள் அல்வா..
இன்றைய காலத்தில் நமது ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது என்பது கேள்விக் குறியாக உள்ளது.. நமது ஆரோக்கியம் மட்டுமல்ல நீண்ட ஆயுளையும் தரக்கூடிய ஒரு உணவை பார்ப்போம்… இதை குழந்தைகள் கூட விரும்பி உண்பார்கள் 2 வயது குழந்தைக்கு கூட கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய்
வெல்லம்
தேன்
வெள்ளரி விதை
இவை அனைத்தும் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம்.
செய்முறை
இரண்டு கப் அளவு பெரிய நெல்லிக்காயை நன்றாக துருவி எடுத்துக் கொள்ளவும். பின்பு அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளவும். அதன்பின் வெல்லத்தை பாகு அளவிற்கு காய்ச்சியபின் அதில் நாம் முன்பு துருவி வைத்திருந்த நெல்லிக்காய் துருவலை போட்டு நன்றாக வதக்கவும். அல்வா பதத்திற்கு வரும்வரை தண்ணீர் இல்லாத அளவு நன்றாக வதக்க வேண்டும். சிறுது நேரம் ஆறிய பின் அதில் சிறிதளவு தேன் மற்றும் வெள்ளரி விதையை கலந்து கொள்ளவும். சுவையான மிக ஆரோக்கியமான நெல்லி ஆயுள் அல்வா ரெடி….
இதில் நாம் வெள்ளரி விதை மட்டுமல்ல உங்களுக்கு பிடித்தமான விதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். நெல்லிக்காய்,தேன், வெல்லம், வெள்ளரி விதை இவை ஒவ்வொன்றும் நம் உடலுக்கு மிக தேவையான ஒவ்வொரு சத்துக்களையும் கொண்டுள்ளது. எனவே இந்த சுவையான நெல்லி ஆயுள் அல்வாவை தினமும் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து வந்தாலே நாம் மிக சுறுசுறுப்பாக இருக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இந்த சத்தான அல்வாவை கொடுத்து ஆரோக்கியமாக இருங்கள்..