தெம்பூட்டும் மணத்தக்காளி தெளிவுதரும்.!
சுக்குட்டி கீரை என்று அழைக்கப்படும் மணத்தக்காளி கீரைகளின் இலை, காய், பழம் அனைத்தும் நல்ல உணவு சத்துள்ள வைகளாக இருப்பதால் வீட்டு பின்புறம் கூட இந்த செடியை பயிரிட்டு வளர்ப்பது பலரும் அறிந்த ஒன்றாகும். உடலுக்கு மிகவும் நல்லது என்றும் சொல்லுவார்கள்.
நம் பெரியவர்கள் நன்கு ஆராய்ந்து அதன் மருத்துவ குணங்களை பலர் வெளியிட்டு இருக்கின்றனர். என்றாலும் இதன் காய் சுமார், அளவில் உருண்டையாகவும், பச்சையாகவும் இருக்கும் போது கரு நீல நிறத்திலும், சில வகை ஆரஞ்சு சிவப்பு நிறத்திலும் இருக்கும் பலவகைகளில் இல்லாதது உடலுக்கு. தெம்பூட்டும் போதுமான நல்ல சத்துள்ள மூலப்பொருட்களை உடலுக்கு வழங்கும் பொக்கிஷம் என்று ஆராய்ச்சியாளர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சிறுநீரகம் முதலியவைகளை நன்கு இயங்கச் செய்யவும். இருதய நோய், காமாலை, அஜீரணம் போன்ற தொல்லை உள்ளவர்களுக்கு, குறைந்த அளவு தண்ணீர் விட்டு இதன் இலையை வேக வைத்து இறக்கிய கசாயம். ஒரு அவுன்ஸ் தேனும் கலக்கி சாப்பிட்டு வருவதால் விரைவில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஆரம்பநிலையில் வாந்தி எடுப்பது நாம் அறிந்த ஒன்று. இந்த மாதிரியான தொல்லைகளில் விடுபட, இன்னும் சாதாரணமாக பலவித வயிற்று கோளாறுகளுக்கு, குடல் கோளாறுகளுக்கு ம், இந்த கீரையை சமைத்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். ரத்தக்குழாய் உடைந்து எச்சில் துப்பும் போது சிலருக்கு ரத்தம் வருவது உண்டு.
இவ்வாறு உள்ள நோய்க்கு நாள்தோறும் மூன்று தடவை இந்த இலைச் சாறை 3 ஸ்பூன் உடன், 3 அத்திப்பழம் சேர்த்து, சாப்பிட்டு வருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோரில், டப்பாவில் அடைத்து அத்திப்பழம் விற்பனையில் கிடைக்கிறது.
மேலும் சொரி சிரங்கு, நாற்றம் வருகின்ற புண்களுக்கும், வாதம் போன்ற வியாதிகளுக்கும், இது நல்ல உணவாக அமைகிறது. இந்தக் கீரையில் உள்ள இலை, காய், பூ, வேர் இவைகளுடன் நன்கு தண்ணீரில் கழுவி இடித்து துணியில் பிழிந்து சாற்றை எடுத்துக் கொண்டு, சம அளவு நல்லெண்ணெயுடன் கலந்து, அடுப்பில் வைத்து மிதமான நெருப்பில் எரிந்து காய வைத்து தண்ணீர் சுரண்டிய பின், 5 ஸ்பூன் எண்ணெய், ஒரு டீஸ்பூன் கடுகு, வெள்ளைப் பூண்டு 4 பல் 15 கிராம், அளவிற்கு இவைகளை காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் கருப்பாக மாறும் வரை அடுப்பில் காய்ச்சி இறக்கி, ஆறிய பின் இளம் துணியால் வடித்து எடுத்து வைத்துக் கொண்டு உபயோகிக்க நல்ல பலனைப் பெற முடியும்.
எண்ணையை தடவி குணம் பெறலாம். குதிங்காலில் வலி உள்ள பகுதிகளில் இந்த எண்ணையை தயாரித்து பூசிவர முழுமையாக குணம் கிடைக்கும் இந்த இலையின் சாரை நெடுநாட்கள் ஆறாத புண்களுக்கும் தீப்புண்களுக்கு அடிப்பட்டு இரத்தம் கட்டிய வீக்கத்திற்கு மணத்தக்காளி இலையையும் வெற்றிலை மஞ்சள் சேர்த்து அரைத்து தடவுவதால் இதன் மூலம் குணம் பெற முடியும்.