கர்ப்பக் காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை !!
கர்ப்பிணிகள் மட்டுமின்றி வீட்டில் உள்ள அனைவரும் தன்னை கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ள பட்டுள்ளோம். கொரோன பிரச்சனையில் வெளியே போக முடியாமல் வீட்டிற்குள் நம் உடலை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணி பெண்கள் எந்த கவலையும் கொள்ளாமல் தன்குழந்தையின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்களே… இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருங்கள் பாதிப்பு உங்களை மட்டும் சாராது.. கர்ப்பக் காலத்தில் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை !!
வாந்தி :
கர்ப்பம் தரித்த முதன்மை மாதங்களில் வாந்தி மற்றும் குமட்டல் ஆகியவை வருவது இயல்பு தான். ஆனால் கர்ப்பம் வளர்ந்த பின் வரும் வாந்தி மற்றும் பேதி ஆகியவை உணவு செரிக்காமல் இருந்தாலோ, உணவில் ஏதேனும் பற்றாக் குறை இருந்தாலோ ஏற்படக்கூடியது.
கர்ப்பக் காலத்தில் கடுமையான காய்ச்சலுக்கான அறிகுறிகள் (தலைவலி, தலைச்சுற்றல், வெயிலில் விரும்பி உட்காருதல்) ஏற்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
அசைவு :
சரியாக 7 மாதத்திற்கு மேல் குழந்தையின் அசைவு ஆரம்பித்துவிடும். அசைந்து கொண்டு இருந்த குழந்தை திடீரென்று அசையாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும் அல்லது வேகமாக அசைந்தாலோ அல்லது உதைத்தாலோ ஆபத்துதான்.
வலிப்பு :
பிரசவத்திற்கு முன்னும், பின்னும் வலிப்பு நோய் வரக்கூடாது. கர்ப்பக் காலத்தில் வலிப்பு நோய் ஏற்பட்டால் அலட்சியாக இருக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது தாய்க்கும், சேய்க்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும்.
இரத்தச்சோகை :
கர்ப்பக் காலத்தில் பெண்கள் உண்ணும் உணவுகள், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே இரத்தச்சோகையைப் போக்கக்கூடிய பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதன் காரணமாக தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்து இரத்தச் சோகை உண்டாகிறது. இது உடலுக்கு சோர்வினை உண்டாக்கும்.
இரத்தக்கசிவு :
இரத்தக்கசிவு ஏற்பட்டால், அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இரத்தக்கசிவு என்பது கர்ப்பப்பையில் இருந்து வரக்கூடியது. மாதவிடாய்க்காலத்தில் வரும் இரத்தக்கசிவு கரு உண்டானப் பிறகு வரக்கூடாது. சிசுவிற்கு ஏதாவது பிரச்சனை என்றால் கரு சிதைந்துவிடும்.
கால்வீக்கம் அடைதல் :
பொதுவாக கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு கெண்டைக் கால்கள் வீங்கி காணப்படும். இது ஏற்படுவதற்கு காரணம், கர்ப்பக் காலத்தில் பெண்ணின் எடை குழந்தையை சுமப்பதற்காக அதிகரிக்கும்.
இவ்வாறு எடை அதிகரிக்கும்போது கால்கள் கர்ப்பிணியின் மொத்த எடையையும் சுமப்பதால் கெண்டைக்கால்கள் வீங்கி விடுகின்றது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவரை அணுக வேண்டும்.
மேலும் படிக்க