தித்திக்கும் சுவையில் உங்களுக்காக..!
நாட்டு மருந்துகளில் வீரியத்தை குறைப்பதற்கு அதன் சுவையைக் கூட்டுவதற்கு முக்கியமாக இடம் பெறுவது தேன். இந்த தேனை நல்லதாக, சுத்தமானதாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும்.
திசுக்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்புச் சத்துக்களை கிரகித்து உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம் எனப்படும் சுவாசத் தொல்லைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நல்ல கெட்டியான தேன் ஒரு ஸ்பூன் தினமும் அருந்துவதால் உடல் கணம், நரம்புத்தளர்ச்சி, நெஞ்சு படபடப்பு குறைகிறது.
ஒரு ஸ்பூன் தேனை இரவில் படுக்கும் போது குடித்து வருவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இதனை தந்து வருவதால் வளர்ச்சி நன்கு இருப்பதுடன், தொற்று நோய் தொல்லைகளில் இருந்தும் பாதுகாக்கும். எலுமிச்சை ரசத்தில் தேன் சேர்த்து அருந்துவது கோடை காலத்தில் நல்ல புத்துணர்வு தருவதாக இருக்கும்.
பதிலாக இதனை பயமின்றி சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மட்டும் சற்று நிதானிக்க வேண்டும். சோர்வுற்றநிலை, அதிக வேலை பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை. மகப்பேறு காலத்தில் உடலில் ஏற்படும் நச்சுத்தன்மை உணர்ச்சி குறைந்த நிலை போன்றவற்றுக்கு தேன் மிகவும் ஏற்றதாக இருக்கும்.
நமக்கு தேவையான சக்தியை தருவதுடன் கார்போஹைட்ரேட் சக்தியை அளித்து திட உணவுகளை வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இரும்பு, தாமிரம், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் இருப்பதால் நல்ல ரத்த விருத்தியை ஏற்படுத்தும் சிறு குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் இது ஏற்றதாக இருக்கும்.
தற்போது இதுவும் இயற்கையான நிலையில் கிடைப்பது அரிதாக இருக்கிறது. இயற்கையில் கிடைக்கும் தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும். இயற்கை நமக்கு அருளிய அமுதங்களில் தேனும் ஒன்று. ஆதி காலத்திலேயே இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. குர்ஆன் எனப்படும் புனித நூலில் கூட நோயாளிகளுக்கு, பலவீனமானவர்களுக்கு தேன் ஒரு நல்ல உணவாகவும், மருந்தாகவும் சிறப்பிக்கப்பட்டு கூறியுள்ளனர்.