மருத்துவம்

இயற்கை உணவின் அமுதமே ஆரோக்யம் தரும்…!!

எல்லா உணவுகளும் சத்து நிறைந்தே காணப்பட்டாலும், நம் உடலுக்கும், நோய்க்கும் ஏற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். மேலும் இயற்கை உணவுகள் சத்தான தாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிட கூடாது. உணவை சாப்பிடும் போது அவசரம் இல்லாமல், பொறுமை யாக, நன்றாக மென்று உமிழ் நீருடன் ருசித்து சாப்பிடு வதால் மட்டுமே நாம் உன்னும் உணவானது எளிதில் ஜீரணம் அடைந்து அதன் முழு சத்துக்களும் உடலில் சேரும். சரியான உணவுகளை தேர்தெடுத்து சாப்பிடுவதால், உடல் நலனும் ஆரோக்யமாக இருக்கும்.

நாகரிக காலத்தில், நாம் நம் குழந்தைகளுக்கு பீட்சா, பர்கர் வாங்கி கொடுத்து உடல் நலனை கெடுக்க வேண்டாம். அவர்களுக்கும் சிறு வயது முதல் இயற்கை உணவுகளை பழக்க வேண்டும். சமீப காலமாக, அனைவரும் இயற்கை யை நோக்கி செல்கிறோம். என்னென்ன நோய்களுக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம் என்று அறிந்து கொண்டு அதன்படி உணவு எடுத்து கொள்ளும் பழக்கமும் இன்றைய சமுதாய சூழலில் கடைபிடிக்கபட்டு வருகிறது.

ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பு:

தினமும் உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள், எடுத்து கொண்டாலும் அதில் சிலவற்றில் ஏற்படும் நோய்க்கான மருந்தாகும் உணவை பற்றி பார்ப்போம். இவற்றில் முதலிடம் கீரை ஆகும். விலை குறைவாகவும், அதிகமாகவும் கிடைக்க கூடியது. இறைச்சி, பால் பொருட்கள் எளிதில் செரிமானம் ஆனாலும், அதில் சில அமில பொருட்கள் உருவாவதை தடுக்க இந்த கீரை நடுநிலைபடுத்த உதவுகிறது. மூளை வளர்ச்சி, கண்களுக்கு குளிர்ச்சி மற்றும் ஒளியூட்டவும், நரம்பு மண்டலம் சுறுசுறுப்பாகவும், மலர்ச்சியை போக்க, உடலின் கிருமி நாசினியாகவும் சில கீரைகள் உதவுகின்றன.

தினமும் இல்லாமல் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உணவில் சேர்ப்பதால் மேற்குறிய நன்மையை பெறலாம்.
வாய்ப்புண்,வயிற்று புண் போக்க மணத்தக்காளி, முட்டைகோஸ் நல்லது. நிலக்கடலை சாப்பிடுவதால் வைட்டமின் ஈ, மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால் இது இதயத்துக்கு பலம் தரும். தூதுவளை, முசுமுசுக்கை, முடக்கத்தான் போன்ற கீரைகளை கூட்டாகவோ, தோசை மாவில் அரைத்து கலந்து தோசையாக சுட குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இதனால் ஆஸ்துமா, சளி தொந்தரவு வராது.

நீர்ச்சத்துக்கள்:

காய்கறிகளில் நீர்சத்து அதிகம் உள்ளதால், உடல் வெப்பம் தணியும். மேலும் வைட்டமின்,மினரல், பாஸ்பரஸ் இருப்பதால் இதை தினமும் அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். கைகளை முதலில் கழுவி பின் நறுக்கி சமைப்ப தால் இதன் முழு சத்தும் கிடைக்கும். இதை தினமும் பிரெஷாக வாங்கி சமைத்து விடுவது நலம். கேரட், தக்காளி பச்சையாகவே சாப்பிட குடுக்கலாம் ஒரு சில கைகளை நன்றாக வேக விட்டும், சில காய்களை பாதி வேக வைத்தும் சாப்பிட வேண்டும்.

பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்சு, நெல்லி, எலுமிச்சை, அன்னாச்சி எடுத்து கொள்ளவும். இது பற்களு க்கும், ஈறுகளுக்கும் உதவும்.தோலின் நிறத்தை கொடுக்கும் வைட்டமின் எ மாம்பலத்தில் உள்ளது. இரும்பு சத்துள்ள பேரிட்சை, கேழ்வரகு சிறு பயறு, அவல், கடலை பருப்பு, முருங்கை கீரை இவற்றில் இருப்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்ப்பது நலம். போதிய இரும்பு சத்து இல்லை என்றால் ரத்தசோகை ஏற்படும். தினமும் எடுக்கும் காய், பழங்கள் வாங்கி வந்ததும் சூடு நீரில் ஊற விட்டு உப்பு, மஞ்சள் சேர்த்து சுத்தம் செய்தே உபயோகிக்கவும். இதனால் அதன் மேல் இருக்கும் ரசாயனங்கள் அழிக்கப்படும்.

மேலும் படிக்க

உங்கள் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *