மருத்துவம்

மேனி பளபளப்பாக கேரட் நல்லது..!!

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண்ணுக்கு பலம் கொடுக்ககூடியது. விழித்திரைக்கு பலம் சேர்ப்பதால், கண் பார்வை நன்றாக தெரியும். கோடைகாலத்தில் வெயிலில் போய்வந்தால் ஏற்படும் புற ஊதா கதிர்கள் தோலை கருக்க செய்யும், இந்த கருமையை போக்க கேரட் சாப்பிடலாம். கேரட் பால் கலந்து பூசினால் கருமை நீங்கும். தோல் அரிப்பு, காயம், சிவப்பு தன்மை, வேர்க்குரு குணமாகும்.

கோடைகாலத்தில்

தோலில் ஏற்படும் பிரச்சனையை போக்க இதை மேல் பூச்சாக பயன்படுத்தலாம். கேரட் கிருமிகளை அளிக்கும் வல்லமை கொண்டதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வீக்கம், வலியை கரைக்க கூடியது. கேரட் வைத்து கோடை காலத்திற்கு ஜூஸ் தயாரிக்கலாம்.

கேரட் ஜூஸ்

ஒரு டம்பளர் பால், கேரட், ஏலக்காய், பனங்கற்கண்டு சேர்த்து ஜூஸ் செய்து காலை குடிக்க உடல் புத்துணர்ச்சி பெரும். உடல் குளிர்ச்சி அடையும். கேரட்டில் அல்சர் மருந்து தயாரிக்கலாம். நாக்கு, தொண்டை, குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோடையில் உடலில் இருந்து வெளியேறும் நீர்ச்சத்தை சமப்படுத்தும்.

கேரட் மென்று சாப்பிட வாயில் உள்ள கிருமி அழிவதுடன், பற்கள் பலமாகும். கேரட் அரைத்த சாறில் மஞ்சள் நீர் சேர்த்து கொதித்து வடிகட்டி குடித்தால் புண்கள் ஆறும். நரம்பு மண்டலம் பலம் பெறும். ரத்த அணுக்களுக்கு ஆரோக்யத்தை கொடுக்கிறது. தினம் ஒரு கேரட் பச்சையாக சாப்பிட உடல் மேம்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

கேரட் துருவல், தயிர் புளிப்பு இல்லாதது,தனியா போடி,மல்லி, உப்பு கலந்து சாப்பிட வயிற்று புண் குணமாகும். நாள் முழுதும் புத்துணர்வாக இருக்கும். எலும்புகள், பற்கள் பலம் கிடைக்கும். வெறும் வயிற்றில் கேரட் சாறை பருகினால் வயிற்று புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். பூச்சிகளால் வரும் நோய்க்கும், உணவு செரிமானம் ஆவதற்கும் கேரட் சிறந்த நிவாரணி.

கேரட் சாறு, தேன், ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வறண்ட சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும். கேரட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இருப்பதால் தான் குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட துவங்கும் போது, முதலில் கேரட்டை பருப்பு சாதத்துடன் மசித்து ஊட்டுவதை தேர்ந்தெடுத்தனர்.

மேலும் படிக்க

எலும்புகளின் பலவீனத்தை போக்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *