மருத்துவம்

சப்போட்டா பழம் வாங்க, ஆரோக்கியத்திற்கு சப்போர்ட்டா இருக்கும்!

சப்போட்டா பழம் பழங்களில் மிகவும் முக்கியமானது விலையும்  வாங்குவதற்கு ஏற்ற வகையில் இருக்கும். சப்போட்டா  மருத்துவ குணங்கள் பல கொண்டுள்ளது.  இதன் நீர் சேர்ந்த சதை பகுதி மதுரமாக இனிக்கும். இதன் கொட்டையை விதையாக்கி  விளைவிக்கலாம்.  அச்சரஸ் சப்போட்டா என்றும் சாபோடில்லா என்றும் இதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள்.


  ஆற்றல் கொடுக்க கூடிய ஆற்றல் மிக்கதாக சப்போட்டா பழம் கொடுக்கும். ஒரு வாழை பழம், ஒரு சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் கிடைக்ககூடிய சத்தினை  சப்போட்டா பழம் சாப்பிடுவதால் பெறலாம்.   100 கிராம் சப்போட்டாவிலே 83 கிராம் கலோரி சத்துகள் அடங்கியுள்ளன. வைட்டமின்கள், தாது பொருட்கள், அமினோ அமிலங்கள் இவற்றுடன் ஆல்கலாய்டுகளையும் சப்போட்டா  தன்னுள் கொண்டுள்ளது. இதை தெரிந்து சாப்பிட்டாலும் தெரியாமல் சாப்பிட்டாலும் நன்மை நமக்கு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மருத்துவ குணங்கள்

சப்போட்டா பழத்தில் இனிப்பு சூயிங்கம் தயார் செய்கின்றனர். ரத்த ஓட்டத்தை விருத்தி செய்வதாகவும், வயிற்று போக்கை தடுக்கக் கூடியதாகவும் சப்போட்டா விளங்குகிறது.
சப்போட்டா பழத்தை ஒரு உணவு பொருள்  மட்டுமல்ல இதிலுள்ள  டேனிப் என்று சொல்லக் கூடிய வேதிப் பொருள் நோய் தடுப்பு பொருளாக செயல்படுகிறது மக்களே இனிமேல் சப்போட்டாவா பார்த்தா  வியாபாரிகளுக்கு சப்போட்டா இருங்க. 
உடலில் புற்று நோய்களை உருவாக்கக் கூடிய நச்சு கழிவுகளை நீக்கி மேலும் நோய் கிருமிகளை உடலை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும் சப்போட்டா பழத்திற்கு உள்ளது.
 சப்போட்டா மரத்தின் இலைகள், பிஞ்சு போன்றவையும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாகும். எனவே இவற்றை கொண்டு வலி மற்றும் வீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான மருந்து ஒன்றை தயார் செய்து முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர்.

 தேவையான பொருட்கள் சப்போட்டா இலைகள், சுக்கு பொடி, மிளகு பொடி, தேன். ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றில் 5 முதல் 6 எண்ணிக்கையிலான சப்போட்டா இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றை சிறிது சிறிதாக வெட்டி கொதிக்க வைத்த தண்ணீரில் இட வேண்டும்.
இது அருமையான பெயின் கில்லர், அது எப்படி செய்யலாம் என பார்போம் வாங்க,  சிறிதளவு சுக்கு பொடி, சிறிதளவு மிளகு பொடி சேர்க்க வேண்டும். பின்னர் மீண்டும் சப்போட்டா இலைகள் வேகும் வரை தண்ணீரை கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் பருகி வருவதால் மூட்டு வலி, உடல் வலி, அல்சர் போன்றவை விலகும். சப்போட்டாவின் விதைகள் தலையில் பொடுகை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *