சாகா வரம் பெற இத எடுங்க..!
தினமும் ஒரே வகையில் தோசையை செய்யாமல், விதவிதமாக செய்து கொடுப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு சத்தான கம்பு வெயில் காலங்களில் அடிக்கடி இதை செய்து கொடுப்பதால் மிகவும் நல்லது. அதை செய்யலாம் வாங்க பார்க்கலாம். இந்த மாவை தேவையானபோது ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்க வேண்டாம். இதன் சுவை மாறுபடும் அவ்வப்போது ஊறவைத்து அரைப்பதால் அதன் சுவையும் மணமும் மாறாது.
கம்பு தோசை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம். புழுங்கல் அரிசி ரெண்டு டம்ளர், பச்சரிசி 2 டம்ளர், உளுந்து அரை டம்ளர், கம்பு ஒரு டம்ளர், உளுந்து ஒரு டம்ளர், இதை ஒவ்வொன்றையும் நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் நன்றாக தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். உப்பு போட்டு மாவை நன்றாக கலந்து ஆறு மணி நேரம் புளிக்க விடவும். மாவு புளித்ததும் தேவையான அளவு எடுத்து வைத்துக் கொண்டு தோசை வார்க்கவும். இப்போது கம்பு மாவு தோசை தயார்.
ராகி தோசை
செய்முறை : ரெண்டு டம்ப்ளர் புழுங்கல் அரிசி, ஒரு டம்ளர் பச்சரிசி, ஒரு டம்ளர் ராகி அரை டம்ளர் உளுந்து, வெந்தயம் அரை ஸ்பூன், எல்லாவற்றையும் கழுவி நான்கு மணி நேரம் ஊறவைத்து, கிரைண்டரில் நைசாக அரைத்து எடுக்கவும். இந்த மாவை உப்பு போட்டு நன்கு அடித்து எடுத்து வைக்கவும். ஐந்து மணி நேரம் கழித்து மாவு புளித்த உடன் தோசையாக ஊற்றவும்.
தோசை மாவு ஊற்றும் முன் கல்லை நன்றாக காயவைத்து தோசை வார்க்கவும். நெய் அல்லது எண்ணெய் விடவும். ராகி சூடு என்பதால் நெய் விடுவது நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் சுகர் பேஷண்ட் க்கு நல்லது. குழந்தைகளுக்கும், ஆரோக்கியமானது ராகியை விரும்பாதவர்கள் இந்த வகையில் தோசை செய்து கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள். இந்த மாவையும் பிரிட்ஜில் வைக்க வேண்டாம். தேவையான போது ஊர வைத்து அரைத்து கொள்ளவும்.
தேங்காய் சட்னி
செய்முறை : அரை மூடி துருவிய தேங்காய், பச்சை மிளகாய்-2, இஞ்சி சிறிய துண்டு, பொட்டுக்கடலை 50 கிராம், கறிவேப்பிலை 5, உப்பு தேவையான அளவு, பூண்டு 2 பல் இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தாள் தேங்காய் சட்னி ரெடி உப்பு காரம் தேவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். சட்னி ரெடியானதும், தாளிக்க ஆயில் விட்டு, கடுகு, கருவேப்பிலை தாளித்து கொட்டவும். கம்பு தோசைக்கு தேங்காய் சட்னி சூப்பர் காம்பினேஷன்.
தக்காளி சட்னி
செய்முறை : துருவிய தேங்காய் அரை மூடி சிறிய வெங்காயம் 7 தோல் உரித்தது, பூண்டு 2 பல், தக்காளி மூன்று கட் செய்து வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுந்து போட்டு தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி நறுக்கியது நன்றாக வதக்கவும் காரத்திற்கு வர மிளகாய் தேவைக்கேற்ப சேர்த்து தேங்காய் துருவியது வதக்கி, உப்பு சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஆறியதும் சிறிது கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் தக்காளி சட்னி ரெடி. இது ராகி தோசைக்கும், கம்பு தோசைக்கும் தேங்காய் சட்னியுடன், தக்காளி சட்னி சேர்த்து பரிமாறவும்.