மருத்துவம்

பயறுகள் சொல்லும் சங்கதி…!! என்ன தெரியுமா..?

உடலுக்கு வலிமை சேர்க்க தினமும் உணவில் முளைகட்டிய பயிறுகளை சேர்த்து கொள்ளவேண்டும். உடற்பயிற்சி எடுத்து கொள்வோர் இளைஞர்கள் உட்பட இதை தினமும் உணவில் எடுத்து கொள்கின்றனர். முளைகட்டிய பயறு மனிதனுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். அவ்வளவு சாது நிறைந்த முளைகட்டிய பயறை பச்சை காய்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

முளைவிட்ட பயிரில் முழு சத்துக்கள் இருந்தாலும், தினமும் எடுத்து கொள்ள சிலர் தயங்குகின்றனர். ஒரு பிடி முளைகட்டிய பயறை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்கள் வேற எந்த ஒரு பிடி உணவிலும் இதன் சத்தை பெற முடியாது. ஒரு தானியத் தில் உள்ள வைட்டமின் அது முலை விட்ட பயராகும் போது அதன் சத்து பன்மடங்காக மாறும். ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தை விட ஒரு முளை கட்டிய கோதுமையில் பெற முடியும்.

வாழ்நாளை நீடிக்கும்

பாசிப்பயறு, கொள்ளு, சோளம் போன்ற பயறை முளைகட்டி சாப்பிடும் போது உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெரும். என்சைம் என்று சொல்ல கூடிய வாழ்நாளை நீடிக்கும் தன்மை இந்த முளை பயிரில் நமக்கு கிடைக்கும். உடலுக்கு ஊட்ட சத்துகளும், தேவையான சக்தியும், உடல் வளர்ச்சியும் தருவதோடு செரிமான சக்தியும் தருகிறது.

தேவையான அளவு பாசிப்பயறு காலை ஊற விட்டு அன்று இரவில் நீரை வடித்து துணியில் சுற்றி வைக்க மறுநாள் காலை முளை விட்ட பயறு கிடைக்கும். இதை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வர குழைந்தைகள் அறிவு வளர்ச்சி, எலும்புகல் வலுப்பெறும். உடல் பொலிவாகும். ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

நோய் தாக்கம் குறையும்.

தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து தேனீர் சாப்பிட வேண்டும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிடுவதால் உடல் பருமன் குறைந்து, மூட்டு வலி நீங்கும். முளைவிட்ட எள்ளு சாப்பிடுவதால் ஒல்லியாக இருப்பவர் குண்டாகலாம். முளைவிட்ட சுண்டல் விளையாட்டு வீரர், கடின வேலை செய்பவர் உண்ணலாம்.
முளைவிட்ட பச்சை பயறு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட கோதுமை புற்றுநோய் தாக்கம் குறையும்.

சோடியம், புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு தாது, பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் தேகம் பலப்படும். வைட்டமின் எ, பி1, பி2, அதிகமாக கிடைக்கும். மிக குறைந்த கலோரி கொண்ட உணவு என்பதால் தினமும் சாப்பிடலாம். வருடம் முழுவதும் தானியங்கள் கிடைக்கும் என்பதால், இதை முளைவிட்டு சாப்பிடலாம்.

வாழ்க வளமுடன்… நன்றி

மேலும் படிக்க

இயற்கை உணவின் அமுதமே ஆரோக்யம் தரும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *