ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

கண் குளிர்ச்சி பெற

கண் பார்வை தெளிவு பெற, கண்ணாடி போடுவதை தவிர்க்க இதை தொடர்ந்து சாப்பிடுங்க. பொன்னாங்கண்ணி நாட்டு மருந்தில் உபயோகம் சிறப்புடையது. பொன்னாங்கண்ணி சூப் இருமல் மற்றும் சளிக்கு நல்ல மருந்து. பொன்னாங்கண்ணி சாறுடன் கிராம்பு, பூண்டு சேர்த்து உண்பதால் காய்ச்சல், ஆஸ்துமா நீடித்த இருமல், மார்பு வலி, சோர்வு ஆகியவற்றை போக்குகிறது.

  • பொன்னாங்கண்ணி சூப் இருமல் மற்றும் சளிக்கு நல்ல மருந்து.
  • ஆஸ்துமா நீடித்த இருமல், மார்பு வலி, சோர்வு ஆகியவற்றை போக்குகிறது.
  • நாட்டுமருந்தில் பொன்னாங்கண்ணி உபயோகம் சிறப்புடையது.

கண் பார்வை தெளிவுக்கு பொன்னாங்கண்ணி

தொடர்ந்து சாப்பிட்டு வர தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும். இந்த இலைச் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து இளம் சூட்டில் நீர் வற்றும் வரை காய்ச்சி குளிர வைத்து தலையில் தேய்த்து வர முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். புத்துணர்ச்சி தரும்.

கண்களுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது.

அதிக வேலைகள் களைப்புற்ற மூளையின் செயலுக்கு, கண்களுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. மேலும் பொன்னாங்கண்ணிச் சாறு, விளா மர இலைச்சாறு ஒரு ஸ்பூன், கொத்தமல்லி இலைச்சாறு சேர்த்து தினமும் இரவு குடித்து வர விந்து உற்பத்தி ஏற்படும்.

இரண்டு ஸ்பூன் பொன்னாங்கண்ணி சாறுடன், முள்ளங்கி இலைச்சாறு சேர்த்து தினமும் 2 முறை அருந்தி வர பைல்ஸ் எனப்படும் மூல நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

கண்களுக்கு மை தீட்ட

பருத்தித் துணியை கொண்டு இந்த இலைச்சாறை நனைத்து நிழலில் காய வைத்து, ஒரு வாரம் கழித்த பின்னர் விளக்கெண்ணையில் நனைத்து எரிய செய்தால் கிடைக்கும் புகை. ஒரு தட்டில் புகையை சேகரித்து இதனை விளக்கெண்ணெயில் கலந்து கண்களுக்கு மை தீட்டினால் அழகாகவும், கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். கண் சோர்வு, கண் நோயின் ஆரம்ப நிலை கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை, கண்களில் நீர் வடிதல் போன்ற தொல்லைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *