ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

நலமாக வாழ சீதாப்பழம்..!!

நலமாக வாழ சீதாப்பழம் எடுத்துக்கொள்ள வேண்டும். சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் அழகாக இல்லாவிட்டாலும், அதன் உள்ளே இருக்கும் சதைப்பற்று அமிர்தத்துக்கு நிகரானது. இதன் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ குணங்களைக் கொண்டதால், நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச் சத்து, எனப் பல சத்துகள் அடங்கியுள்ளது.

அமிர்தத்துக்கு நிகரான

இத்தனை சத்துக்களை தன்வசம் கொண்டுள்ள சீதாப்பழத்தை அதன் பலனை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஆரம்பநிலை காசநோய் குணப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. சீதா பழச்சாறு குடித்தால் கோடையில் ஏற்படும் தீராத தாகம் தணிந்து, உடல் குளிர்ச்சி பெறுவதோடு, தொடர்ந்து வாந்தி, குமட்டல், ஏற்பட்டால் ஒரு பழத்தை மென்று சாப்பிடுவதால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து எடுத்து, பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வருவதால், குடற்புண் விரைவில் குணமாவதுடன். சிறுநீர் பிரியாமல் அவதிப்படுபவர்கள் சீதா பழச்சாறுடன், சிறிது எலுமிச்சை பழச்சாறு, கலந்து பருகுவதால் தாராளமாக சிறுநீர்த்தடை தீங்கும். சீத்தாப்பழம் சிறிது இஞ்சிச்சாறு கருப்பட்டி சேர்த்து உண்பதால், பித்தம் மொத்தமாக விலகும். இரவில் ஒரு சீதாப்பழம், இரண்டு பேரீச்சம் பழமும், சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.

ஈரப்பதம் 70 சதவீதமும், புரதம் 1.6, கொழுப்பு 0.4, மணிச்சத்து 0.9, நார்ச்சத்து 3.1, கால்சியம் 17 மில்லிகிராம், பாஸ்பரஸ் 47 மில்லி கிராம், இரும்புச்சத்து 4.31 மில்லி கிராம், வைட்டமின் சி 37 மில்லி கிராம், ஆகியவை அடங்கியுள்ளன. சிறுவர்களுக்கு கொடுத்து வருவதால் உடல் உறுப்புகள் பலம் அடைகிறது. குளிர் காய்ச்சலை குணப்படுத்தும். தலைக்கும், மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும்.

நினைவாற்றல் அதிகரிக்க

இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன் நினைவாற்றல் அதிகரிக்கும். முடியை பாதுகாக்கும். வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இந்தியாவில் பல இடங்களில் இதை தலைமுடிக்கான எண்ணையாக பயன்படுத்துகின்றனர். முடியை பாதுகாக்கும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை கொண்டிருப்பதால் இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

முள் சீத்தா

பழம் சம அளவு குளுக்கோசும் சுக்ரோசும் காணப்படுவதால் தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. முள் சீத்தாவின் புற்றுநோய் எதிர்ப்பு வேதிப் பொருள் அடங்கியுள்ளதால் இது மட்டுமின்றி மூட்டு வலி சிறுநீரக பிரச்சினை குடல் புழு போன்ற தொல்லைகளிலிருந்து, இப்பழங்கள் நமக்கு நிவாரணம் தருகின்றன. இரும்பு போன்ற தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் ஏராளமாக உள்ளதால், ஒரு பழம் சுமார் 60 கலோரி சக்தியை தரக்கூடியதாக உள்ளது.

சீத்தாப்பழ விதை பொடியோடு, கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது. பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இருதய வியாதிகள் பலவீனம் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் இருதயத்தில் உள்ள தமனிகள் நன்றாக செயல்படும். இயற்கையாகவே பல ரகங்கள் உள்ளன.

இதில் உள்ள அசிட்டோஜெனின் என்ற மருந்துப் பொருள், மருத்துவ தண்ணிக்கு காரணமாக விளங்குகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்கள் சீத்தாப் பழத்தை சாப்பிட்டு வருவதால் பிரச்சினை தீரும். இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவர புண்கள் ஆறுவதுடன், வெட்டுதல் மற்றும் தீக்காயங்கள், இந்த இலையை அரைத்துப் பூசிவர ஆறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *