தகதகன்னு தக்காளி பழம் மாதிரி இருக்க இத செய்ங்க..!!
தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அதிலுள்ள விட்டமின் சி தோலின் நிறத்தை மாற்றும் தன்மை கொண்டது. ஒவ்வொரு நாளும் காலை மாலை என தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக கிடைக்கும். ஒருவர் ஒருநாளைக்கு கால் கிலோ தக்காளி வரை எடுத்துக் கொள்வதால், உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் ஒரு தக்காளியை பிழிந்து, அதனுடன் எலுமிச்சை பழச் சாறையும், இனிப்பும் கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.
கருவளையம் உள்ளவர்கள் தக்காளி, வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து கருவளையத்தின் மீது பூசி பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இவ்வாறு செய்து வந்தால் கருவளையம் மறைந்துவிடும். முகம் பொலிவிழந்து போனால் தக்காளிச் சாற்றில், சிறிது ரவையைக் கலந்து, முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊற வைத்து, பின் முகத்தை கழுவினால், முகம் பிரகாசிக்கும்.
எலும்புருக்கி போன்ற நோயை தடுக்கும் மருத்துவ குணமும் தக்காளிக்கு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதோடு பச்சையாக சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட உபாதைகள் இருந்தாலும் நீங்கிவிடும். தக்காளியில் அதிக அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. அத்துடன் உடம்பில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
உடல் பருமன் குறைக்க
தக்காளி விதைகளை ஒட்டி இருக்கும் ஜெலட்டின் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ஃப்ரூட் ப்ளோ என்ற பொருள் ரத்தம் கட்டி அதை தடுத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடல் பருமன் குறைக்க தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் விறைத்து அழகிய தோற்றம் கிடைக்கும். காரணம் தக்காளி கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கிறது. உடல் பலவீனமாக உள்ளவர்கள் தினசரி தக்காளி ரசம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். செரிமானக் கோளாறு, கல்லீரல் பாதிப்பு, ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு தக்காளியைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது.
தோலை பளபளப்பாக
தோல் நோய்கள், நீரிழிவு, மலச்சிக்கல், ரத்தசோகை போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள். தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும். தக்காளியை உட்கொண்டாலும், அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால், தோல் நோய்கள் வராது. தோலை பளபளப்பாக வைத்திருக்கும் சுத்தமான நீரும் வைட்டமின் சத்தியும் அதிகமாக உள்ளது.
தக்காளி சமையலுக்கு ரசம் வைப்பதற்கும் மட்டுமே பயன்படுத்துகிறோம், என்பது பலரது கருத்து. ஆனால் தக்காளியை பச்சையாகவோ, சுத்தம் செய்து சாப்பிடும் போது ஏராளமான சத்துக்கள் கிடைக்கின்றன. இப்படி சாப்பிடும் போது உடலுக்கு பலம் கிடைக்கிறது. உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு, இது ஒரு சிறந்த டானிக்காக அமைகிறது.
இதில் வைட்டமின் ஏ சுமார் 91 மில்லி கிராம் அளவு உள்ளது. வைட்டமின் ஏ வைட்டமின் பி1 பி2 17 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் உள்ளன. தவிர உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி ரத்தத்தை சுத்திகரிக்கவும், சீரான ரத்த ஓட்டத்துக்கு பயன்படுகிறது.