சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ப்ரோக்கோலி பெப்பர் ஃப்ரை

முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை அதிகம் காணப்படுகின்றன.

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரோக்கோலி மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள். உயர்ரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. ப்ராக்கோலியை எப்படி சமைக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க.

ப்ரோக்கோலி பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள் : சிறு துண்டுகளாக செய்து ப்ரோக்கோலி ஒரு கப் கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு. எண்ணெய் தேவையான அளவு. கறிவேப்பிலை சிறிது, பச்சை மிளகாய் 2, வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப், மிளகுத் தூள் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் அரை ஸ்பூன், பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்.

செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு பின் அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து புளியும் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கி நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு இதில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து பிரட்டி வேக வைத்துள்ள ப்ரோக்கோலி சேர்த்து பொன்னிறமாகும் வரை பிரட்டி மிளகுத்தூளை சேர்த்து கிளறி இறக்கினால் ப்ரோக்கோலி பெப்பர் ஃப்ரை ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *