மருத்துவம்வாழ்க்கை முறைவாழ்வியல்

மருந்தாகும் செடி கொடி

இந்திய மூலிகைகளும் அதன் வாழ்வியல் பலன்களும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இந்தியாவில் வளரும் செடி கொடிகள் நமது சூழலுக்கு ஏற்ப நமது உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குபவையாக இருக்கின்றன.

இயற்கையின் கொடை :

இயற்கையின் அருட்பிரசாதமான செடி கொடிகள் நமது உடலில் ஏற்படும் நோய்களை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகைகள் வெற்றிலை இயற்கையின் மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கின்றது.

இதய நோய்களை உண்டாக்கும் கிருமிகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது மற்றும் அரசமர இலையானது மருத்துவ குணங்களை அதிகமாக கொண்டிருக்கின்றது. கீழாநெல்லி இலை மனிதர்களுக்கு ஏற்படும் கல்லீரல் பிரச்சனைகளை தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது மூளையை வலுப்படுத்த பெருமூலையை மேலும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வல்லாரை உதவியாக இருக்கின்றது.

நல்லது தரும் நாவல்:

நல்லது தரும் நாவல் பழம் தெரியுமா மக்ளே! நாவல் பழங்கள் சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கின்றது. நுரையீரல் தொற்றினை தூது சென்று தடுகின்றது. தூதுவளை இலை நுரையீரலில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துகின்றது. செடி கொடிகள் தான் நமக்கு உதவுகின்றன.

ஆரோக்கியம் தரும் மரங்கள்:

இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கின்றது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இயற்கையின் அருட்பிரசாதமான தாவரங்களை முறையாக பயன்படுத்த வேண்டியது நமது கடமையாகும். மரங்கள் எவ்வாறு மனிதனுக்கு உதவியாக இருக்கின்றன என்பதை பார்ப்போம் வாங்க ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு தன்மை உண்டு அந்த வகையில் நம்மைச் சுற்றியுள்ள மரங்கள் நமக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன என்பது இந்த அவசர உலகில் நாம் அறிந்து கொள்ள தவறுகின்றோம்.

அறம் செயும் மரம்:

மரத்தின் குணம் தெரிந்தால் இயற்கையின் கொடைகளான தாவரம் மற்றும் மரங்களை பாதுகாக்க மேலும் நடவடிக்கைகளை எடுக்க முயல்வோம். குணல நலன்கள் தெரிந்து கொள்வதுடன் உணர்ந்தால் வாழ்வின் வெற்றி நிச்சயம். மரத்தின் பட்டைகளை பொடியாக்கி அவற்றை மனித சருமத்தில் பயன்படுத்தும் போது தோல் நோய்கள் குணமாவதுடன் மாசுவினால் ஏற்படும் தொற்றுகளை தடுக்கின்றது.

சித்தர்களின் குறிப்புகள்:

மரத் தண்டுகள் மட்டுமல்ல ஒரு மரத்தின் தண்டு பகுதி மனிதனின் சதைகளை குணப்படுத்தும் சக்தி கொண்டது மற்றும் மரத்தின் வேர் மனிதனின் நரம்புகளை வலுப்படுத்தும் ஆயுதங்களாக இருக்கின்றன. பாரம்பரிய குணங்களை ஒத்துள்ள மருந்துகள் நாம் தொடர்ந்து பயன்படுத்தி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் மரத்தின் சத்துக்களை தெரிந்து கொள்ள சித்தர்களின் குறிப்புக்கள் நமக்கு உதவிகளாக இருக்கின்றன. சித்தர்களின் ஒவ்வொரு புத்தகமும் குறிப்பும் நமக்கு வாழ்வியல் போக்குகளை கற்றுத் தருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *