ஆரோக்கியம்குழந்தைகள் நலன்யூடியூபெர்ஸ்வாழ்க்கை முறைவாழ்வியல்

Health and body care: எந்திர உலகத்தில் எப்படி ஆரோக்கியமாக வாழ்வது என்பதை பார்ப்போமா

உடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் நண்பர்களே

உடல் ஆரோக்கியமாக இருக்க அனைவரும் விரும்புவர் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வரம்புகள் என்று ஏதாவது ஒரு நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது அவசியமாகின்றது.

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் நமது உணவு, வாழ்க்கை முறை ,பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் நாம் ஏற்படுத்த மாற்றங்கள் இந்த எந்திர உலகத்திலும் தந்திரமாக நாம் செயல்படும்போது நமது வாழ்வியலில் சிறப்பான ஆரோக்கியமான உடல் மற்றும் மனநல மிகுந்து வளமுடன் வாழலாம்.வீட்டில் இருக்கும் பெரியோர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக அந்த காலத்தில் பின்பற்றப்பட்ட ஒரு சில உணவு முறைகளை நடைமுறைப்படுத்தி கற்றுத் தர வேண்டும். மேலும் நடுத்தர வயதினர் அல்லது இளம் வயதினர் மாணவர்கள் எவராக இருப்பினும் உணவு குறித்த விழிப்புணர்வு அடிப்படையான உணவு குறித்து பொதுவான அறிவு தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகிறது.

தினசரி உணவில் மாற்றம்

நீங்கள் தினமும் இட்லி சப்பாத்தி என்று சாப்பிட்டு வருபவரா . தினமும் இட்லி, சப்பாத்தி சாப்பிடும்போது இட்லி மாவு ,கம்பு மாவு, ராகி மாவு மற்றும் திணை மாவு ,கருப்பு கவுனி மாவு அல்லது உளுந்து களி, ராகி களி ஆகிய முறைகளை சேர்த்து செய்யும் போது உணவில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

தேங்காய் தினசரி உணவில் அல்லது வாரத்தில் மூன்று முறையாவது சாப்பிட்டு வரும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் அதிகரிக்கும்.

காய்கறிகள் நாம் வாங்கும் போது நாட்டு காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீசனுக்கு ஏற்ப அவற்றை வாங்கி சமைத்து சாப்பிடுவது அவசியமாகின்றது.

குழந்தைகளுக்கு ஜங்க் புட்டுகள் வாங்கித் தருவதை நிறுத்த வேண்டும். மாதத்தில் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே சாப்பிடுவதற்கு அனுமதிக்க வேண்டும். எதுவானாலும் வீட்டிலே செய்து கொடுத்து பழக்க வேண்டும்.

மேலும் படிக்க : வித்தியாசமான டேஸ்ட்டில் மக்ரோனி ரெசிபி

அடிக்கடி நடந்து வரவேண்டும் அத்துடன் சிறு சிறு யோக முத்திரைகள் மற்றும் அமைதியான இசை இயற்கை சூழலில் நடந்து வருதல் ஆகியவற்றின் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை செய்தால் உடலும் மனமும் சூப்பரா இருக்கும்

நல்ல சிந்தனைகள் என்றும் நிறைந்து வைத்திருக்க வேண்டும்.ஆன்மீகத்திற்கு நேரம் ஒதுக்கினால் சிறப்பு அது அமைதியை கொடுக்கும்.

தினசரி வீதியில் அல்லது நம் வீட்டில் வளர்க்கும் நாய் , பூனை போன்ற பிராணிகளுக்கு உணவளித்தல், எறும்புகளுக்கு உணவளித்தல் மற்றும் புறாக்கள் , குருவிகளுக்கு நீர் மற்றும் உணவு கொடுத்தல் என்பது சிறப்பாகும். இந்த பழக்கங்களை சிறுவயதில் இருந்து தாய் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் இப்பழக்கங்கள் குறித்து பேச வேண்டும்.

இது போன்ற காரியங்கள் செய்யும்போது கொடை உள்ளம் பெருகும்.அதிவேக எந்திர உலகத்தில் குழந்தைகள் அடிக்கடி செல்போனில் மூழ்குகின்றனர். அது தவறு என்பதை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் மேலும் அவர்களுடைய பாதையை திசை மாற்றும்படியாக அவர்களது திறமையை அதிகரிக்க அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மொழிகள் 5 கற்க வேண்டும் மனது திடமாக இருக்க நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் கதைகள் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். சிறு வயது முதல் மாணவர்களுக்கு கண்காணிப்பு அவசியம் ஆகும்.வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் எங்களால் பிள்ளைகளை கண்காணிக்க முடியாது என என்று சொல்பவரை சொல்வீர்களா அப்படி எனின் உங்களால் முடியாவிட்டால் உங்களது பெற்றோர்களை உங்கள் வீட்டில் வரச் சொல்லி அவர்களுக்கு குழந்தைகளிடம் பழக அனுமதியுங்கள். அவர்களை பலவற்றை கற்றுக் கொடுப்பார்கள் இந்த வயதில் குழந்தைகள் பெரியவர்களுக்கு ஆதரவாகவும் இருக்க முடியும் மேலும் பெரியவர்களுக்கு குழந்தைகள் பலமாகவும் இருப்பார்கள்.வெளியே சென்று விளையாட அனுமதி என்பது தற்போதைய காலகட்டத்தில் மறுக்கப்படுகின்றது, அது தவறு நாம் அவர்களுடன் இருந்து கண்காணித்து அவர்கள் விருப்பப்படி விளையாட அனுமதிக்கும்போது குழந்தைகள் தங்களது வளர்ச்சியில் மாற்றத்தினை உணர்வார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு என்று தன்னம்பிக்கை பாதை வலி கிடைக்கும்.

மேலும் படிக்க : ப்ளம் கேக் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்

உடல் ,மனம் ,ஆரோக்கியம் மற்றும் அவற்றை நல்வழியில் செயல்படுத்துதல் அவற்றிற்கான நல் பழக்க வழக்கங்களை பின்பற்றுதல் என்பது அவசியமாகின்றது எவ்வளவுதான் நாகரீகம் மாறினாலும் மனிதன் என்பவன் ரத்தமும் சதையும் உணர்வுகளும் ஒன்றைப் பிறந்தவன் என்பதை நாம் மறக்க கூடாது இனிமேல் வாழ்வினை வளமுடன் வழிநடத்திச் செல்வோம்.

Image credit : Google search

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *