கல்விஞானத்தையும் செல்வத்தையும் பெறுவதற்கு இவரை வழிபடுங்கள்
ஞாபக சக்தி குறைவாக இருப்பவர்கள். பேச்சு சரியாக வராதவர்கள். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள். ஹயக்ரீவரை தொடர்ந்து வழிபட்டு வர சகல குறை நீங்கி ஞானம் அதிகரிக்கும்.
செல்வாக்கும், சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடைபெறும்.
புதனுக்கும், புத்திக்கும் தொடர்பு இருக்கிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம். வித்யா காரகன் என அழைக்கப்படுபவர். மனதை ஆள்பவன் சந்திரன். சந்திரனின் புத்திரன் புதன்.
மனதின் எண்ண ஓட்டத்திற்கும், அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர தசை நடப்பவர்கள் புதன்கிழமை அன்று திருவோண நட்சத்திரத்திலும், ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும், அறிவும் மேம்படும்.
மேலும் ஞாபக சக்தி பெருகும். ஹயக்ரீவர் காயத்திரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வருவதால் கல்வியில் கவனமும், நாட்டமும் அதிகரித்து, நிறைய மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம். கடலூருக்கு அருகே திருவந்திபுரம். பாண்டிச்சேரிக்கு அருகே முத்தியால்பேட்டை. ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ள இந்த ஸ்தலத்திற்கு சென்று வரலாம்.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லட்சுமி ஹயக்ரீவரை வணங்கி வரலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கடலூர் மாவட்டம், திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயில் சென்று வரலாம்.
ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் அவரை வழிபட்டு அன்றைய தினத்திலிருந்து தொடர்ந்து வருடாவருடம் ஒவ்வொரு புதன்கிழமை சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு வரலாம். கல்வி ஞானத்தையும், செல்வத்தையும் பெறுவதற்கு இவரை வழிபடுங்கள்.