ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே..!!
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
இதை தினமும் பாராயணம் செய்து வர அனைத்து இன்பங்களும் வாழ்வில் வந்து சேரும்.
ஒரு முறை இளம் வயது சிறுவனாக இருந்த போது தன் சன்யாசதிற்கு அனுமதி கொடுத்த, தன் தாயாருக்கு தாயாரின் இறுதிக் காலத்தில் தானே நேரில் வருவதாக ஆதிசங்கரர் சத்தியம் செய்து கொடுத்தார். அதன்படி தன்னுடைய தாயாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் வந்த ஆதிசங்கரர் தாயாருக்கு பரமனை பற்றியும், சிவபெருமானைப் பற்றியும், பாடல்கள் பல பாடினார்.
ஆனால் அவற்றால் அமைதியோ, திருப்தி அடையாத தன் தாயாருக்கு, இறுதியில் கீழ்கண்ட கிருஷ்ணாஷ்டகம் எனப்படும் ஹரிஷ் துதி பாடல்களை பாட, பகவான் ஹரி தாயார் லட்சுமி உடன் தோன்றி, அவருடைய தாயாருக்கு பரமபதம் அளித்ததால், கிருஷ்ணாஷ்டகம் ஒவ்வொரு பாடலிலும் ஆதிசங்கரர் கிருஷ்ணரை என்னுடைய கண்கள் தரிசனம் செய்யட்டும் என்று பாடினார்.
ஹரிஷ் துதி பாடல்
சரணடைந்தவர்களை காப்பவரும், லோக ஈஸ்வரனும் ஆகிய கிருஷ்ணரை என்னுடைய கண்கள் தரிசனம் செய்யட்டும். லக்ஷ்மியால் அணைத்தபடி இருப்பவர் அவர். விஷ்ணுவும் அவரே, அசையும் அசையாத அனைத்திற்கும் அவரே குரு, வேதத்தின் சாரமும் அவரை தாமரையின் நயனங்கலை உடையவராகவும், அசுரர்களை வதைபராகவும், ஞானத்தின் சாட்சியும், அவரே ஹரி, வேதத்தின் சாரமும், தூய்மையானவர், சங்கு மற்றும் சக்கரம் ஏந்தியவர், காட்டு மலர்களால் மாலையை அணிந்தவர், நிலைத்த ருசி உடையவர்.
இவருடைய ஊக்கம் இன்றி யாரும் சுதந்திரமாக செயல்பட இயலாது; கவிஞர்களின் கவித்திறனின் கர்வத்தை குணப்படுத்துபவன். அவர் மனிதர்களின் துக்கத்தை அளிப்பவராகவும், சரணடைந்தவர்களுக்கு உதவுபவராகவும், அவர் சுயம்பானவராகவும் ஜீவன்களை தோற்றுவித்து சுகமும் துக்கமும் தருபவராகவும் திகழ்பவர்,குழப்பத்தை குணப்படுத்துபவன் கருநீல நிறம் உடையவராகவும், வீர ஜயின் அழகிய குழந்தை அர்ஜுனனின் சகா..
இந்தப் பூமியை அதன் பகுதியாக இருந்து பரிபாலிப்பவர், அவர் நம்முடைய வேதனைகளை சுமப்பவரே, வேதங்களில் உரைக்கப்படும் பிரபஞ்ச நாயகத்திற்கு சட்டங்களை தருபவரும், தூய்மையானவரை, முனிவர்கள், தேவர்கள் மற்றும் மனிதர்கள் அனைவரின் இலக்கும் அவரே, அளிப்பவரும் அவரே.
அவரை தியானம் செய்யாதவர்களும், பன்றி போன்ற மிருகங்களின் பிறவியை தருபவர்; அவர் அவரைப் பற்றிய ஞானம் மற்றவர்களுக்கு பிறப்பு, இறப்பின் பயத்தை உண்டாக்குபவர்; அவர் அவரைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு கிருமிகளின் பிறப்பை அளிப்பவர் ஆகிறார்.
நீர், நிலம், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகியவற்றின் பிறப்பிடமாகவும், மதுவை வதம் செய்தவராகவும், பிரபஞ்ச அறிவின் சர்வத்தையும், தன்னுள் வைத்து, தன்னுடைய விரிவாக்கங்களையும் காப்பவராகவும். மனதின் செயல்களை முற்றிலும் நிலைநிறுத்திய கற்றறிந்த முனிவர்களால் காணப்படுபவர் ஆகிறார்.
தர்மம் அழிகின்ற நிலையிலே, ஒழுங்கீனம் தலை தூக்கிகிறது; பக்தர்களை பாதுகாப்பற்ற வரும் பிறப்பற்ற வரும் யாருடைய குண கீதங்களை வேதங்கள் பாடுகின்றனவோ; அந்த விரஜா பதியான கிருஷ்ணர் லோக ஸ்வாமியாக தோன்றி சரி செய்கிறார். சாஸ்திர சுருதியால் ஆராதிக்கப்பட்ட அகிலாண்ட கோடி பிரமாண்டா குணங்களை பொருந்திய பகவான் ஹரி கருணை பொழியும் முகத்துடன் சங்கு சக்கரம், கதை, தாமரை தன் கரங்களில் ஏந்திய வரலட்சுமியுடன், சங்கரர் முன் தோன்றி காட்சி அளித்தார்.
இதை பாராயணம் செய்வதால் நீங்களும் பரமாத்மாவின் அருளை பெறுகிறீர்கள். நாம் வாழும் இந்த வாழ்க்கை கடவுள் நமக்கிட்ட இட்ச்சை ஆகும். என்பதை அனைவரும் உணர்ந்து பொறுப்புடன் செயல் பட வேண்டும்.