சினிமா

நாட்டாமைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

பஞ்சாக்ஷரம் ரங்கசாமி பிள்ளைக்கு இன்னைக்கு பிறந்தநாளுங்க. ஆமாங்க நீங்க நினைச்சது சரிதான் விஜயகுமாருடன் இயற்பெயர் பஞ்சாச்சரம் ரங்கசாமி பிள்ளை.

29 ஆகஸ்ட் 1943ல தஞ்சாவூர்ல பஞ்சாச்சரம் ரங்கசாமி பிள்ளை பிறந்திருக்கிறாரு. 1961 ஸ்ரீ வள்ளி படத்தில குழந்தை குணச்சித்திர நடிகரா திரையுலகத்தில களமிறங்கி இருக்காரு விஜயகுமார். திரை உலக மேடைக்காகப் பஞ்சாச்சரம் ரங்கசாமி பிள்ளைங்கற தன்னோட பெயர விஜயகுமார் மாத்தி வச்சிருக்காரு.

1974 அவள் ஒரு தொடர்கதை பட மூலமா முன்னணி நடிகரா திரை உலகத்துல பட்டைய கிளப்பு ஆரம்பிச்சாரு. குழந்தை குணச்சித்திர நடிகரா திரையுலகத்தில அறிமுகமானவரு தமையனா, துணை நடிகரா, கதாநாயகரா, வில்லனா, தந்தையா தற்போது பல படத்தில் போலீஸ் கெட்டப்பில் கம்பீரமா வளம் வராரு. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் பிற மொழிகளிலும் நடிச்சிருக்காரு.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னோட பாணியில திறமையா பிரமாதமா நடிச்சு அந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் இவ்வளவு பொருத்தமாக இருக்க மாட்டாங்கங்கற அளவுக்கு கனகச்சிதமான செஞ்சிருப்பாரு. நட்புக்காக படத்துல சரத்குமாருக்கு நண்பனா இவரவிட வேறு யாரும் இருந்திருக்க முடியாதுங்கிற அளவுக்கு எல்லாரையும் யோசிக்க வச்சவரு. இந்த ஒரு படமே இவருடைய மொத்த திரையுலக பயணத்துக்கு எடுத்துக்காட்டா அமையும்.

திரை உலக அரசியல்ல இருந்ததோடு தமிழ்நாட்டு அரசியல்லையும் பங்கு வகிச்சிருக்காரு. தென்னிந்திய நடிகர் சங்கத்தோடு தலைவராக 2015 வரைக்கும் இருந்தவரு அ.தி‌.மு.க. கட்சியோட உறுப்பினராக இருந்தாரு. அதைத்தொடர்ந்து பா.ஜ.க. கட்சியோட மத்திய அமைச்சராக பொன் ராதாகிருஷ்ணன் இருந்த சமயத்துல இவரு ஆசெம்ப்லி எலக்சன்காக பிரச்சாரம் செய்தாரு.

அரசியல்வாதியாக இருந்தாலும் திரையுலகத்துல தன்னோட பயணத்துக்கு கொடுத்த முக்கியம் தான் அதிகம். வெள்ளித்திரை மட்டுமில்லாம சின்னத்திரையிலும் பல சீரியல்கள்ல தன்னோட நடிப்பை விரிவுபடுத்திட்டே இருக்காரு. இவருக்கு திரைப் பின்னணிய இல்லனாலும் இவரால இவரோட குடும்பத்துக்கு பெரிய வாய்ப்பு கிடைச்சது. தன்னோட மகன் மகள்களுக்கு திரையுலக மேடைய பிரமாதமா அமைச்சுக் கொடுத்திருக்கிறாரு.

விஜயகுமாரோட மகன் அருண்விஜய் மற்றும் மகள்கள் ப்ரீதா ஸ்ரீதேவி வனிதா இவங்க யாரையும் நமக்குத் தெரியாம இல்ல‌. திரையுலகத்துல அப்பாவும் மகனும் இணைந்து பல படங்கள் நடிச்சிட்டு இருக்காங்க.

சினம் படத்தோடு டப்பிங் சமீபத்தில் ஆரம்பிக்க அப்பாவும் மகனும் இணைஞ்சு சூப்பரான போஸ் கொடுத்திருக்காங்க. 1961-2020 59 வது வருட திரைப்பயணத்த வெற்றிகரமா பயணச்சிவரு தன்னோட 77 வது பிறந்தநாள இன்னிக்கு கொண்டாடுறாரு.

மக்களே இவருக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *