சினிமா

விஜய் ஆண்டனிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

24 ஜூலை 1975ல நாகர்கோவில்ல பிறந்திருக்கிறாரு. திரைஜஉலகத்தில இசை சம்பந்தப்பட்ட எல்லா டெக்னிகல் தொழிலும் கைதேர்ந்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி திகழ்ராரு. இசை பணியில செம்மையா முடிச்சுட்டு நடிப்பிலையும் களம் இறங்கினாரு விஜய் ஆண்டனி.

எடிட்டிங் தயாரிப்பாளர் என்று பல திறமைகளை தன்னுள்ளே வெச்சுட்டு இருக்க ஒரு சைலன்ட் மனிதர் விஜய் ஆண்டனி. 2005ல சுக்கிரன் படம் மூலமா தன்னோட திரைப் பயணத்தை இசையமைப்பாளராக தொடங்கிய இவருக்கு அடுத்த வருடமே படத்தில் துணை நடிகராக நடிக்கும் வாய்ப்புகள் வந்தன.

2012ல் முன்னணி கதாநாயகனாக நான் என்னும் படத்தில் களமிறங்கினாரு விஜய் ஆண்டனி அதை தொடர்ந்து 2017ல திரையுலகில் எடிட்டர் பணியும் அண்ணாதுரை படத்தின் மூலமாக தொடங்கினாரு.

இவரோட இசை அமைப்பாளர் திறனுக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்து பல விருதுகளும் பெற்ற முன்னணி இசையமைப்பாளராக இருந்தவருக்கு சரித்திர சாதனை கிடைச்சுது. சிறந்த இசை பிரிவில் நாக்கா முக்கா விளம்பரப் படத்திற்காக 2009 கேன்ஸ் கோல்டன் லயன் வென்ற முதல் இந்தியர் விஜய் ஆண்டனி தாங்க. அந்தப்பாடல் 2011 கிரிக்கெட் விளையாட்டோட உலகக் கோப்பை பொழுது ஒலிபரப்பானது.

படம் நடிப்புன்னா சும்மா இல்லைங்க எல்லாமே திரில்லர் படமான நடித்துவிட்டாரு. சலீம் சைத்தான் எமன் பிச்சைக்காரன் கொலைகாரன் எல்லாமே சூப்பரா இருந்தது. சைலண்ட் ஹிட்னு சொல்ற மாதிரி இருக்கிற இடம் தெரியாம படத்தை சூப்பர் ஹிட்டாகினாரு விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2

விஜய் ஆண்டனி தன்னோட அம்மாவோட உடல்நலனுக்காக பிச்சைக்காரன் வேடத்தில் நடித்த படம் பிச்சைக்காரன். அதோட தொடர்ச்சியா பிச்சைக்காரன் 2 திரைப்படம் படப்பிடிப்பில இருக்கிற இந்த சமயத்தில அவருடைய பர்த்டேவ முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைக்கு இணையதளத்தில வெளியிட்டு இருக்காங்க.

தமிழ் தெலுங்குனு இரண்டு மொழிலையும் 2021ல் வெளியாக இருக்கிற படம் பிச்சைக்காரன் 2/பிச்சகாடு 2. முதல் பகுதியைப் போலவே இரண்டாவது பகுதியும் இரண்டு மொழிலையும் வருது.

விஜய் ஆண்டனி தொழிலதிபரா பிச்சைக்காரன் படத்துல வந்தவரு அந்த கதாபாத்திரத்தை இரண்டாவது பகுதியிலையும் தொடராரு. மக்களை பார்த்த மாதிரி கோட் சூட் போட்டு பின்பக்கத்திலிருந்து படம் புடிச்சு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர வெளியிட்டு இருக்காங்க இந்த படத்தோட குழுவினர்.

மக்களே பிச்சைக்காரன் 2 படத்திற்கு வெயிட் செஞ்சுட்டே விஜய் ஆண்டனிக்கு ஒரு விஷ்ஸசை போட்டு விடுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *